இப்படியும் ஒரு தலைவர்! பதவி விலகிய பிறகு சைக்கிளில் சென்ற நெதர்லாந்து பிரதமர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 11, 2024

இப்படியும் ஒரு தலைவர்! பதவி விலகிய பிறகு சைக்கிளில் சென்ற நெதர்லாந்து பிரதமர்

featured image

ஆம்ஸ்டெர்டாம், ஜூலை 11- இந்தியா உட்பட உலகின் பெரும்பாலான நாடுகளில் அதிகாரப் பரிமாற்றம் நடக்கும் போது பல்வேறு அரசியல் அசம் பாவிதங்கள் நிகழ்கின்றன.
அமெரிக்காவில், 2020 அதிபர் தேர் தல் முடிவுகளுக்குப் பிறகு அதிகார மாற்றத்தின் போது கூட ஒரு கலவரம் ஏற்பட்டது. இருப்பினும், அதிகார பரிமாற்றம் மிகவும் அமைதியாகவும் எளிமையாகவும் இருக்கும் ஒரு நாடு உள்ளது, அது இப்போது பேசு பொரு ளாக மாறியுள்ளது. அய்ரோப்பிய நாடான நெதர்லாந்து பிரதமர் தனது பதவியிலிருந்து விலகி சைக்கிளில் வீட்டிற்கு சென்ற காட்சி வைரலாகி வருகிறது.

நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே 14 ஆண்டுகள் ஆட்சியில் இருந்து தனது பதவியை விட்டு வெளியேறியபோது, ​​​​அவர் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார். அவர் ஒரு சைக்கிளை எடுத்துக்கொண்டு ஹேக்கில் உள்ள அலுவலகத்தை அடைந்தார். உள்ளே சென்று தலை வர்களை சந்தித்து கைகுலுக்கி, ஒருவருக் கொருவர் வாழ்த்துக்களை ஏற்று ஆட் சியை ஒப்படைத்தார். இதையடுத்து வெளியில் வந்த அவர் அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு சைக்கிளில் புறப் பட்டார்.
மார்க் ரூட்டின் இந்த காட்சிப் பதிவு சமூக வலைதளங்களில் வைர லாகி வருகிறது. காட்சிப் பதிவின் ஆரம்பத்தில், புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமரான டிக் ஷூப்பிடம் அவர் சாவியை ஒப்படைப்பதைக் காணலாம். இதையடுத்து இரு தலைவர்களும் ஒன்றாக உள்ளே சென்றனர். அங்கு இருவரும் பரஸ்பரம் பேசிக்கொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். இறுதியாக ரூட் மற்றும் ஷூஃப் வெளியே வருகிறார்கள். அலு வலக வாசலில் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி கொண்டனர்.

அலுவலகத்திற்கு வெளியே சைக்கிள் ஒன்று நிறுத்தப்பட்டிருப்பதை காட்சிப் பதிவில் காணலாம். மார்க் ருட்டே ஷூப்பைச் சந்தித்த பிறகு, சைக்கிளின் அருகே சென்று அதன் பூட்டைத் திறந்து அதில் அமர்ந்தார். பின்னர் அவர் திரும்பி வந்து, அங்கிருந்த தலைவர்களிடம் தனது ஊழியர்களுடன் விடைபெற்று தனது சைக்கிளில் புறப்படுகிறார். வழியில் பல தலைவர்களையும் மக் களையும் சந்திக்கிறார். அனைவரின் வாழ்த்து களையும் ஏற்றுக்கொண்டு வீடு நோக்கி செல்கிறார்.
டிக் ஷூஃப் யார்? டிக் ஷூப் அந்நாட்டின் மேனாள் உளவுத்துறை தலைவராக இருந்துள் ளார். மன்னர் வில்லெம்-அலெக்சாண் டர் முன்னிலையில் அவர் அதிகாரப் பூர்வமாக பிரதமராக பொறுப்பேற்றார். உளவுத்துறை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் நிபுணத்து வம் பெற்ற ஷூஃப் பிரதமர் பத விக்கு நியமிக்கப்பட்டது மிகவும் ஆச்சரிய மாக உள்ளது. அவர் இப்போது வலதுசாரி கூட்டணி அரசாங்கத்தை வழி நடத்து கிறார். ஷூப் எந்த கட்சியுடனும் கூட்டணியில் இல்லை என்பது குறிப் பிடத்தக்கது.

No comments:

Post a Comment