விவாகரத்து பெறும் முஸ்லிம் பெண்களும் ஜீவனாம்சம் பெறலாம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 12, 2024

விவாகரத்து பெறும் முஸ்லிம் பெண்களும் ஜீவனாம்சம் பெறலாம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

featured image

புதுடில்லி, ஜூலை 12– விவா கரத்தான முஸ்லிம் பெண்களும் ஜீவனாம்சம் பெறலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

தெலங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் முகமது அப்துல் சமது. இவர், தன் மனைவியை கடந்த 2017ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். அப்பெண், ஜீவனாம்சம் கோரி,குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதை ஏற்று, அவருக்கு மாதம் ரூ.20 ஆயிரம் வீதம் இடைக்கால ஜீவனாம்சம் வழங்குமாறு முகமது அப்துல் சமதுவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை எதிர்த்து தெலுங் கானா உயர்நீதிமன்றத்தில் அப்துல் சமது, மேல்முறையீடு செய்தார். முஸ்லிம் தனிநபர் சட்டப்படி விவாகரத்து செய்ததாகவும், விவாகரத்து சான்றிதழ் இருப்பதாகவும், ஆனால் அதை குடும்பநல நீதிமன்றம் பரிசீ லிக்க தவறிவிட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.

ஆனால், குடும்பநல நீதிமன்றம் உத்தரவில் உயர்நீதி மன்றம் தலையிட மறுத்து விட்டது. இருப்பினும், ஜீவனாம்ச தொகையை ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக குறைத்தது. அந்த உத்தரவை எதிர்த்து முகமது அப்துல் சமது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். நீதிமன்றத்துக்கு உதவும் ஆலோசகராக வழக்குரைஞர் கவுரவ் அகர் வாலை உச்ச நீதிமன்றம் நியமித்தது. அப்துல் சமது சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் வாசிம் காத்ரி, “முஸ்லிம் பெண்களுக்கு 1986ஆம் ஆண்டின் விவாகரத்துக்கான உரிமைகள் பாதுகாப்பு சட்டம்தான் பொருந்தும். ஜீவனாம்சம் தொடர்பான இந்திய குற்றவியல் சட்டத்தின் 125ஆவது பிரிவு பொருந்தாது என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களுக்கு பிறகு கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப் பட்டது. இந்நிலையில், நீதிபதிகள் பி.வி.நாகரத்தினா, அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு 10.7.2024 அன்று இவ்வழக்கில் பரபரப்பு தீர்ப்பு அளித்தது. முகமது அப்துல் சமதுவின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து நீதிபதிகள் கூறியதாவது:- ஜீவனாம்சம் வழங்குவது தொடர்பான குற்றவியல் நடை முறை சட்டத்தின் 125ஆவது பிரிவு, மத வேறுபாடுகளை கடந்து, நடுநிலையான, மதச் சார்பற்ற சட்டப்பிரிவு, அது, அனைத்து பெண்களுக்கும் பொருந்தும்.
பெண்களின் உரிமை

எனவே, குற்றவியல் நடை முறை சட்டத்தின் 125ஆவது பிரிவுப்படி, விவாகரத்தான முஸ்லிம் பெண்க ளும் கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் பெறலாம். அந்த பிரிவை விட 1986ஆம் ஆண்டின் முஸ்லிம் பெண்கள் விவாகரத்து உரிமைகள் பாதுகாப்பு சட்டம் மேலானது அல்ல. மேலும், ஜீவனாம்சம் என்பது தர்ம காரியம் அல்ல. அது திருமணமான அனைத்து பெண்களின் உரிமை. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

No comments:

Post a Comment