நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம்: காங்கிரஸ் கோரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 11, 2024

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம்: காங்கிரஸ் கோரிக்கை

featured image

புதுடில்லி, ஜூலை 11- நாடாளு மன்றத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர வேண்டுமென காங்கிரஸ் கோரியுள்ளது.
பிரதமர் மோடி நாடாளுமன் றத்தில் உரையாற்றிய போது, மேனாள் குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரியை அவ மதிக்கும் வகையில் பேசியதாகவும், இதுதொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் அவருக்கு எதிராக மாநிலங் களவையில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர வேண்டும் எனவும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக மாநிலங் களவை தலைவர் ஜெகதீப் தன்கருக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்

எழுதியுள்ள கடிதத்தில் கூறி யுள்ளதாவது:-
மேனாள் குடியரசு துணைத் தலைவர்
பிரதமரின் உரிமை மீறல் மற்றும் சபையை அவமதிக்கும் ஒரு விடயத்தை உங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். கடந்த 2ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத் துக்கு பிரதமர் மோடி அளித்த பதிலுரையின் போது, “2014-வந்த போது, மாநிலங்களவையில் எங்கள் பலம் குறைவாக இருந்தது. அவைத் தலைவர் எதிர்கட்சிகளுக்கு ஆதரவாக இருந்தார்” என கூறினார்.
மேனாள் குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரியின் பெயரை பிரதமர் குறிப்பிடவில்லை என்ற போதிலும், இந்த இழிவான கருத்துகள் மேனாள் மாநிலங்களவை தலைவரை (ஹமீத் அன்சாரி) குறிக்கிறது என்பதில் எந்த சந்தேக மும் இல்லை.
மோடிக்கு எதிராக
உரிமை மீறல் தீர்மானம்
ஹமீத் அன்சாரி எதிர்க்கட்சியின் பக்கம் சாய்ந்ததாக பிரதமரால் முன் வைக்கப்பட்ட இந்த குற்றச்சாட்டு முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடி யாதது மற்றும் முற்றிலும் தவறானது. மிகவும் இழிவானதும் கூட.
பிரதமரின் இந்த விமர்ச னத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. ஹமீத் அன்சாரியை பிரதமர் விமர்சிப்பது இது முதல் முறை அல்ல.
கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்டு 10ஆம் தேதி ஹமீத் அன் சாரியின் பிரியாவிடை நிகழ்ச்சியில் உரை யாற்றிய மோடி, அன்சாரியின் முந்தைய தூதரக பணிகளை குறிப்பிட்டு அவரது ஓய்வு குறித்து கேலி செய்தார்.
பிரதமர் மோடி செய்ததைப் போல், வேறு எந்த பிரதமரும் மக்களவைத் தலைவரையோ, மாநிலங்களவை தலைவரையோ விமர்சித்து பேசியது இல்லை அனைத்து விதிமுறைகளையும் பிரதமர் மீறிவிட்டார். இந்த விவ காரத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என கோருகிறேன்.
– இவ்வாறு அந்த கடிதத்தில் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment