சந்திக்க வருவோர் ஆதார் அட்டையுடன் வரவேண்டுமாம் பிஜேபி நாடாளுமன்ற உறுப்பினரின் அதிகார போதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 13, 2024

சந்திக்க வருவோர் ஆதார் அட்டையுடன் வரவேண்டுமாம் பிஜேபி நாடாளுமன்ற உறுப்பினரின் அதிகார போதை

சிம்லா, ஜூலை 13- பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத், இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்தநிலையில், கங்கனா ரணாவத் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:

இமாச்சலப் பிரதேசம் நாடு முழுக்க இருந்து அதிகப்படியான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. எனவே மண்டி பகுதியில் இருந்து வருவோர் என்னைச் சந்திக்க ஆதார் அட்டை கட்டாயம் எடுத்து வர வேண்டும். மேலும், மக்கள் எந்த சிரமத்தையும் சந்திக்காமல் இருப்பதை உறுதி செய்ய நீங்கள் எதற்காக வருகிறீர்களோ அதை வெள்ளைத்தாளில் கடிதமாகவும் எழுதி எடுத்து வாருங்கள்.

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவதால், சாமானியர்கள் நிறையச் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இமாச்சலின் வடக்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்னைச் சந்திக்க விரும்பினால், மணாலியில் உள்ள எனது வீட்டிற்கு நேரடியாக வரலாம். மண்டியில் உள்ளவர்கள் அங்குள்ள எனது நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு வரலாம். இமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகிறார்கள். இதனால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே ஆதார் எடுத்து வர சொல்கிறேன். மேலும், உங்கள் கோரிக்கை குறித்துத் தனிப்பட்ட முறையில் என்னைச் சந்திப்பது நல்லதுதான். மண்டி தொகுதியில் இருக்கும் போது மக்களுடன் முழு நேரத்தையும் அர்ப்பணிக்கத் தயாராக இருக்கிறேன். மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து அவற்றைத் தீர்க்க முயற்சிப்பேன்.

-இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment