ஹத்ராஸ் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகையை உயர்த்த வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 8, 2024

ஹத்ராஸ் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகையை உயர்த்த வேண்டும்

featured image

முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு ராகுல் காந்தி கடிதம்

புதுடில்லி, ஜூலை 8- ஹாத்ரஸ் கூட்ட நெரிசலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க வேண் டும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத் ரஸ் மாவட்டம், புல்ராய் கிராமத்தில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் 2.7.2024 அன்று நடைபெற்ற சாமியார் ‘போலே பாபா’வின் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 போ் உயிரிழந்தனா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக 2 பெண்கள் உள்பட 6 பேரை காவல் துறையினா் ஏற்கெனவே கைது செய்தனா். இதனிடையே தலைமறைவாக இருந்த முக்கிய நபரான தேவ்பிரகாஷ் மதுக்கா் கடந்த 5.7.2024 அன்று நள்ளிரவு டில்லியில் கைது செய்யப்பட்டாா்.

அவரைத் தொடா்ந்து இச்சம்ப வத்தில் தொடா்புடைய சஞ்சு யாதவ் மற்றும் ராம்பிரகாஷ் சாக்யா ஆகியோரை காவல்துறை 6.7.2024 அன்று கைது செய்தது.
இதனிடையே, ஹாத்ரஸ் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பங்களை சந்திக்க மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி 5.7.2024 அன்று காலை டில்லியில் இருந்து சாலை வழியாக புல்ராய் கிராமத்திற்கு சென்றார். பாதிக்கப்பட்டவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் இந்த சோக சம்பவம் குறித்து கேட்டறிந்த ராகுல், பாதிக்கப்பட்டவர்களுக்கு காங்கிரஸ் சார்பில் தேவையான எல்லா உதவிகளும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்க காங்கிரஸ் உறுதியாக போராடும் என ராகுல் காந்தி தெரிவித்தார்.

ஹாத்ரஸ் நிகழ்வின்போது கூட்ட நெரிசலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடாக உத்தரப்பிரதேச மாநில அரசு தலா 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர் களுக்கு தலா 50,000 ரூபாயும் இழப்பீடு வழங்குவதாக அறிவித்திருந்தது.
இந்த நிலையில் ஹாத்ரஸ் கூட்ட நெரிசலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என உ.பி. முதலமைச்சர் சாமியார்ஆதித்யநாத்துக்கு நேற்று (7.7.2024) எழுதியுள்ள கடிதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
அதில், உத்தரப் பிரதேச அரசு அறிவித்துள்ள இழப்பீடு மிகவும் போதுமானதாக இல்லை. எனவே, இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி, விரைவில் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதோடு, அவர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள அவர் இச்சம்பவத்திற்கு காரண மானவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்றும் தனது கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment