வரவேற்கத்தக்க சமூகநீதியின் அடையாளம்!
சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள மூத்த நீதிபதி ஜஸ்டிஸ் ஆர்.மகாதேவன் அவர்களது பெயர், உச்சநீதிமன்றத்தின் ‘‘கொலிஜியம்” (நீதிபதிகள் நியமனப் பரிந்துரைக் குழு) தற்போது காலியாக உள்ள இரண்டு நீதிபதிகள் இடங்களில் ஒன்றுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இது பாராட்டத்தக்க பரிந்துரையாகும். அனுபவம், சட்ட அறிவின் நுண்மான் நுழைபுலம் தமிழ்ப் பண்பாடு, இலக்கியம், சமூகநல உரிமைக் கண்ணோட்டத்தோடு பல தீர்ப்புகளை வழங்கிடத் தயங்காதவர் என்ற பெயர் அவருக்குண்டு.
எனவே விரைவில் ஒன்றிய அரசின் சட்டத் துறையின் ஒப்புதல் – நியமனமாக வெளிவரும் என்று எதிர்பார்க்கிறோம்.
உச்சநீதிமன்றத்தின் இந்தப் பரிந்துரையில் ஒரு குறிப்பிடத்தக்க புதிய திருப்பம் என்னவென்றால், முதன்முறையாக – சமூகநீதிக்காகவே இவர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தவர் என்ற காரணமும் –சமூகநீதிப் பார்வைக்கும் மக்களின் கோரிக்கைக்கும் கிடைத்துள்ள வெற்றியின் வெளிச்சமாகும்.
”The Collegium said Justice Mahadevan was ”eminently suitable” for appointment as a Supreme Court Judge. He belongs to a backward community from Tamil Nadu, and will bring diversity to the Supreme Court Bench.”
இதுதான் நம் அரசமைப்புச் சட்டம் வற்புறுத்தும் சமூகநீதிக் கோட்பாடு.
ஒரு விடியலின் தொடக்கமாகவே நீதிபதிகளின் நியமனம் துலங்குகிறது.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை,
12.7.2024
No comments:
Post a Comment