மயிலாடுதுறை, ஜூலை10- மயிலாடுதுறை மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
06-07-2024 அன்று மாலை 6 மணியளவில் மாவட்ட அலு வலகத்தில் மாவட்டத் தலைவர் கடவாசல் குணசேகரன் தலைமை யில் நடைபெற்றது.
கழக காப்பாளர் சா.முருகையன், மாவட்ட அமைப்பாளர் ஞான.வள்ளுவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் கி.தளபதிராஜ் அனைவரையும் வரவேற்று கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கத்தினை எடுத்துரைத்தார். சிறப்பு அழைப் பாளராக மயிலாடுதுறை நாடாளு மன்ற உறுப்பினர் வழக்குரைஞர் ஆர்.சுதா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். உடன் மயி லாடுதுறை சட்ட மன்ற உறுப்பினர் ஆர்.ராஜ்குமாரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்
ஆர்.சுதா
நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சுதா தனது உரையில்: தாம் இத்தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்தியதையும் அவரிடம் தான் பெரியாரின் பேத்தி என்று சொன்னதைக் கேட்ட ஆசிரியர் இத்தொகுதியில் எங்கள் தோழர்கள் எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராமல் உங்கள் வெற்றிக்கு பாடுபடுவார்கள் என்று சொன்னார்கள். அவர் குறிப்பிட்டது போலவே தோழர்கள் அனைவரும் எனக்கு ஒத்துழைப்பு நல்கி இமாலய வெற்றிபெற வைத்துள்ளீர்கள். இதற்கான நன்றியினை இன்றைக்கு உங்களிடம் தெரிவிப்பதோடு மட்டுமின்றி தொகுதி முழுமைக்குமான எனது நன்றியறிவிப்பு நிகழ்வுகளில் கட்டாயம் அனைத்து பகுதிகளிலும் உள்ள திராவிடர் கழகத் தோழர் களின் இல்லங்களுக்கு வருகை தருவேன் என்று மகிழ்வோடு தெரிவித்தார். நீட் தேர்வு குறித்து கடுமையான கண்டனத்தை தெரிவித்த அவர் நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி ஆற்றிய உரையையும் சுட்டிக் காட்டினார்.
சட்ட மன்ற உறுப்பினர்
ஆர்.ராஜ்குமார்
சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராஜ்குமார் பேசும்போது தொகுதிக்கான நலத்திட்டங்களை நிறைவேற்றுவது குறித்து விளக்கினார். வருகை தந்த கழகத் தோழர்கள் அனைவருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பயனாடை அணிவித்து நன்றி தெரிவித்தார். கழகப் பொறுப்பாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு சால்வை அணிவித்து தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
கூட்டத்தில், 13-07-2024 அன்று மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வருகை தரும் நீட் எதிர்ப்பு இரு சக்கர வாகனப் பிரச்சாரப் பயணத்திற்கு மாவட்ட எல்லையில் சிறப்பான வரவேற்பு அளிப்பது, மயிலாடுதுறை மற்றும் குத்தாலம் கடைவீதியில் நீட் எதிர்ப்புக் கூட்டங்களை நடத்துவது, விடுதலை சந்தாவுக்கான இலக்கை விரைவில் எட்டுவது குறித்து விரிவாக பேசப்பட்டது. நகர செயலாளர் பூ.சி.காமராஜ் நன்றி கூறினார்.
நகர தலைவர் சீனி.முத்து, துணைத் தலைவர் இரெ.புத்தன், ஒன்றியத் தலைவர் டி.வி.இளங்கோவன், செயலாளர் அ.சாமிதுரை, சீர்காழி ஒன்றியத் தலைவர் ஆ.ச.சந்திரசேகரன், செயலாளர் கடவாசல் செல்வம், குத்தாலம் ஒன்றிய துணைச் செயலாளர் தி.சபாபதி, கொள்ளிடம் ஒன்றியத் தலைவர் பி.பாண்டியன், செயலாளர் பூ.பாண்டுரங்கன், செம்பை ஒன்றிய செயலாளர் கோ.கவுதமன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் தங்க.செல்வராஜ், மாவட்ட இளைஞரணி தலைவர் க.அருள்தாஸ், மகளிரணி செயலாளர் ச.தமிழ்மணி, பி.ராஜேந்திரன், மு.வசந்த், சாமி.கணேசன்,கொக்கூர் ராஜமாணிக்கம் மற்றும் கழக தோழர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment