'நீட்' எதிர்ப்பு பயண குழுவினருக்கு உதவி: பாராட்டு - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 13, 2024

'நீட்' எதிர்ப்பு பயண குழுவினருக்கு உதவி: பாராட்டு

8-33

மதுரை, ஜூலை 13- மதுரைக்கு வருகை தந்த பயணக்குழுவினரை பழங்காநத்தம் பகுதியில் சிறப்பான வரவேற்பை அளித்து பரப்புரை முடித்து மதிய உணவிற்காக 3மணிக்கு தமிழக எண்ணெய்ப் பலகாரம் கடைக்கு வந்தனர்.

மதுரை போட்டோகிராபர் இராதா பயணத் தோழர்களுக்குப் பயன்படும் என யோசித்து 20 பேருக்கு மழை பாதுகாப்பு உடைகளை (ரெயின் கோட்) அன்பளிப்பாக வழங்கினார்.3-45க்கு பயணக் குழுவினர் புறப்பட்டனர். மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அருகில்செல்லும்போது திரண்டு வந்த கருமேகங்கள் கடும் மழையைப் பொழிந்தன.

தூத்துக்குடியிலிருந்து கடும் வெயிலில் வந்த தோழர்களுக்கு மழை இதமானதாக இருந்தாலும் பயணம் சிறிது நேரம் தடைப் பட்டது. போட்டோ இராதா வழங்கிய மழையாடையை அணிந்து உசிலம்பட்டி வரை கடும்மழையிலும் பயணத்தைத் தொடர்ந்தனர். முன்கூட்டியே யோசித்துதக்க பயன்படும் பரிசை வழங்கிய இராதாவிற்கும் மதிய உணவிற்காக ஏற்பாடுகளைசெய்த ,நன்கொடையை வழங்கிய மாவட்ட காப்பாளர் தே.எடிசன்ராஜா, மாவட்ட இளைஞரணி தலைவர் செல்வப்பெரியார் ஆகியோருக்கு கழகப் பொறுப்பாளர்கள் பாராட்டுக்கள். வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment