‘விடுதலை’ செய்தி எதிரொலி திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் கொண்டாடப்படும் என அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 8, 2024

‘விடுதலை’ செய்தி எதிரொலி திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் கொண்டாடப்படும் என அறிவிப்பு

featured image

திருச்சி, ஜூலை 8 திருச்சி பாரதி தாசன் பல்கலைக் கழகத்தில்ஒவ்வொரு ஆண்டும் பெரியார் பிறந்த நாள் கொண்டாப்பட்டு வந்த நிலையில், தற்போதைய துணைவேந்தர் செல்வம் பொறுப்பேற்ற பிறகு கடந்த 2021, 2022, 2023 ஆகிய 3 ஆண்டுகளில் பெரியார் பிறந்த நாள் கொண்டாடப் படாமல் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது. இதுகுறித்து விடுதலையில் ஜூலை 4 ஆம் தேதி செய்தி வெளியானது.

இந்நிலையில் பாரதிதாசன் பல்கலைக்கழக பெரியார் உயராய்வு மய்யத்தின் சார்பில் ஜூலை 5 ஆம் தேதி வெளியான செய்திக்குறிப்பில் பெரியார் பிறந்த நாளான செப்.17 ஆம் தேதி புதன் கிழமையன்று பல்கலைக் கழகத்தில் பெரியார் பிறந்த நாள் விழா நடைபெற உள்ளது.

இந்நிகழ்வில் பெரியாரின் கொள்கைகளை மக்களிடையே பரப்பி சமூகத் தொண்டாற்றி வரும் பெரி யாரியல் சிந்தனையாளர்களுக்கு பெரியார் சிறப்பு விருதுவும்பெரியாரின் சிந்தனைகளை ஒட்டி எழுதப் பெற்ற சிறந்த நூலுக்கு பெரியார் விருதும் மற்றும் பெரியார் பரிசும் வழங்கத் திட்ட மிடப்பட்டுள்ளது.

எனவே தகுதியுடையவர் களைத் தேர்வு செய்ய ஏதுவாகபெரியாரியல் சிந்தனையாளர்கள் தங்களைப்பற்றிய விவரக் குறிப்புகள் மற்றும் 2023 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட நூலின் இரண்டு படிகளுடன் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. விண்ணப் பங்கள் 2024ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 16 ஆம் தேதிக்குள் பாரதிதாசன் பல் கலைக்கழக பெரியார் உய ராய்வு மய்ய இயக்குநர் முனைவர் அ. கோவிந்த ராஜனுக்கு விரைவு அஞ்சலில் அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நமதுசெய்தி எதிரொலியாக தந்தை பெரியார் பிறந்த நாளை இவ்வாண்டு (2024) நடத்து வதாக பல்கலைக்கழகம் அறிவித்திருந்தாலும், கடந்த 3 ஆண்டுகளாக நடத்தப்படாத பெரியார் பிறந்த நாள் விழா வினை சேர்த்து நடத்துவ தோடு, பெரியார் விருதும் மற்றும் பரிசு தொகையினை சேர்த்து வழங்கிட வேண்டு மென்பதே பெரியார் பற்றாளர்கள், சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

No comments:

Post a Comment