
வடசென்னை மாவட்டம் தாணா தெருவில் நீட் ஒழிப்புப் பிரச்சார இருசக்கர வாகனப் பயணத்திற்கு இன்று (11.7.2024) காலை 10:30 மணிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன் தலைமையில், மாவட்ட தலைவர் தளபதி பாண்டியன் முன்னிலையில் கழகத்தின் பொருளாளர் வீ.குமரேசன், துணைப் பொதுச்செயலாளர்கள் ச. இன்பக்கனி, ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் உரையாற்றினர். நிகழ்வில் பொதுமக்களுக்கு ’நீட்’ சமூகநீதியைச் சாகடிக்கும் கண்ணிவெடி! எனும் தலைப்பிலான துண்டறிக்கை வழங்கப்பட்டது. நீட் தேர்வு ஒரு கண்ணிவெடி என்ற 10 ரூபாய் மதிப்புள்ள புத்தகம் பொதுமக்களிடையே விற்பனை செய்யப்பட்டது. துணைப்பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தோழர்களிடம் உண்டியல் ஏந்திச் சென்றார். 11 மணிக்கு வாகனப்பயணம் அங்கிருந்து புறப்பட்டது. நிகழ்வில் தலைமைக்கழக அமைப்பாளர்கள் வி.பன்னீர்செல்வம், தே.செ.கோபால், ஓட்டேரி பாஸ்கர், அயனாவரம் தேவராஜ் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment