சமூக நீதிக்குச் சாவு குழி வெட்டும் 'நீட்'டை எதிர்த்து திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் எழுச்சியுடன் இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 13, 2024

சமூக நீதிக்குச் சாவு குழி வெட்டும் 'நீட்'டை எதிர்த்து திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் எழுச்சியுடன் இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணம்!

featured image

அருப்புக்கோட்டை பகுதியில் பரப்புரைப் பயணம்

நீட் தேர்வு ரத்து செய்ய ஒன்றிய அரசு வலியுறுத்தி தமிழ்நாடு தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகன பரப்புரை பயணக் குழு ஒன்று (கன்னியாகுமரி முதல் சேலம் வரை)

நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் தமிழ்நாடு தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகன பரப்புரை பயணம் 12_07_2024 மதியம் 12.00 மணி அளவில் அருப்புக்கோட்டை பகுதியில் பிரச்சார பரப்புரை பயணம் நடைபெற்றது.இதில் பயணத் தலைவர் திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரப் பாண்டியன், பயண ஒருங்கிணைப்பாளர் சு.இனியன் அவர்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் பா.ராஜேந்திரன் வரவேற்புரை ஆற்றினார். தலைமை கழக அமைப்பாளர் இல.திருப்பதி தலைமை வகித்தார். சட்டக் கல்லூரி மாணவர் கழக மாநில அமைப்பாளர் மு. இளமாறன் சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காப்பாளர் அ.தங்கசாமி, மாவட்ட தலைவர் கா.நல்லதம்பி, மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மற்றும் துணைத் தலைவர் ந.ஆனந்தம், மாவட்ட செயலாளர் விடுதலை தி.ஆதவன், இரா.முத்தையா, காஜா மொய்தீன், மாணிக்கம், சதாசிவம், கிள்ளிவளவன், மதிவண்ணன் மற்றும் திராவிடர் கழக, திராவிட முன்னேற்ற கழக தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர். நகர இளைஞரணி தலைவர் க.திருவள்ளுவன் நன்றி உரையாற்றினார்.

தேனி பழைய பேருந்து
நிலையம் அருகே பரப்புரை

நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞர் அணி திராவிட மாணவர் கழகம் சார்பில் தமிழ்நாடு தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகன பரப்புரை பயணத்தில்

கன்னியாகுமரி முதல் சேலம் வரை நடைபெறும் பரப்புரை பயண குழுவானது 12.7.2024 அன்று இரவு 8.00 மணி அளவில் தேனி பழைய பேருந்து நிலையம் அருகே வந்தடைந்தது…

இந்த நிகழ்வில் தேனி மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி தலைவர் லோ.முத்துச்சாமி தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் பூ.மணிகண்டன் வரவேற்புரை யாற்ற… மாநில மாணவர் கழக செயலாளர் செந்தூர்பாண்டியன், மாணவர் கழக துணை செயலாளர் இனியன், கழக சட்ட மாணவர் கழக செயலாளர் இளமாறன் ஒருங்கிணைப்பில்..
கழக இளைஞரணி செயலாளர் வெங்கடேசன், இளைஞர் அணி துணைச் செயலாளர் சென்றாயன், மாநில அமைப்பாளர் சுருளிப்பட்டி சிவா, கம்பம் மாவட்ட செயலாளர் செந்தில்குமார், கம்பம் மாவட்ட இளைஞரணி தலைவர்

முத்தமிழன் முன்னிலையில்…

தோழமைக் கட்சி தோழர்கள் சிபிஅய்எம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் தர்மர், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் நீலக்கனலன், ஆதித்தமிழர் பேரவை சுரேஷ், திராவிடர் தமிழ் கட்சி மாவட்ட செயலாளர் ராமசாமி, தமிழ் தேசிய மார்க்சிய கழக ஒருங்கிணைப்பாளர் மதியவன் இரும்பொறை, அய் ராஜா ஆண்டிபட்டி திக, கோட்டைககளம் சகாதேவன் தி.க, வழக்கறிஞர் செல்வகுமார் தமிழ் தேசிய மார்க்சிய கழகம் மற்றும் அனைத்து கட்சி தோழமை இயக்க தோழர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

உசிலம்பட்டி பகுதியில் பரப்புரை

நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் தமிழ்நாடு தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகன பரப்புரை பயணம் 12_07_2024 மதியம் 6.00 மணி அளவில் உசிலம்பட்டி பகுதியில் பிரச்சார பரப்புரை பயணம் நடைபெற்றது.இதில் பயணத் தலைவர் திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரப் பாண்டியனும், பயண ஒருங்கிணைப்பாளர் சு.இனியனும் கலந்து கொண்டனர். தலைமை கழக அமைப்பாளர் மதுரை செல்வம் தலைமை வகித்தார். சட்டக் கல்லூரி மாணவர் கழக மாநில அமைப்பாளர் மு. இளமாறன் சிறப்புரை ஆற்றினார். நகர இளைஞரணி தலைவர் க.திருவள்ளுவன் அவர்கள் நன்றி உரையாற்றினார்.

ஆண்டிப்பட்டி பகுதியில் பரப்புரை

நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் தமிழ்நாடு தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகன பரப்புரை பயணம் 12_07_2024 மதியம் 7.00 மணி அளவில் ஆண்டிப்பட்டி பகுதியில் பிரச்சார பரப்புரை பயணம் நடைபெற்றது.இதில் பயணத் தலைவர் திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரப் பாண்டியனும், பயண ஒருங்கிணைப்பாளர் சு.இனியனும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாணவர் கழக மாநில துணை செயலாளர் ஜீவா வரவேற்புரை ஆற்றினார். சட்டக் கல்லூரி மாணவர் கழக மாநில அமைப்பாளர் மு. இளமாறன் சிறப்புரை ஆற்றினார். மாவட்ட துணை தலைவர் ச. நாகராஜன், சுரேஷ், கண்ணன்,மாவட்ட அமைப்பாளர் சிவா மற்றும் திராவிடர் கழக, திராவிட முன்னேற்றக் கழக தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர். கம்பம் மாவட்ட செயலாளர் செந்தில் நன்றி உரையாற்றினார்.

போடிநாயக்கனூரில் பரப்புரை

நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் தமிழ்நாடு தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகன பரப்புரை பயணம் 12_07_2024 இரவு 9.00 மணி அளவில் போடிநாயக்கனூரில் பிரச்சார பரப்புரை பயணம் நடைபெற்றது. இதில் பயணத் தலைவர் திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரப் பாண்டியனும், பயண ஒருங்கிணைப்பாளர் சு.இனியனும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாணவர் கழக மாவட்ட தலைவர் பெரியார் மணி வரவேற்புரை ஆற்றினார். மாவட்டத் தலைவர் சுருளிராஜன் தலைமை வகித்தார். சட்டக் கல்லூரி மாணவர் கழக மாநில அமைப்பாளர் மு. இளமாறன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். கா.சிவா, திராவிட முன்னேற்றக் கழக நிஜாம், கம்பம் மாவட்ட தலைவர் செந்தில்குமார், மகளிர் பாசறை விஜயலட்சுமி மற்றும் திராவிடர் கழக, தோழமை இயக்க தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

திருமங்கலத்தில் பரப்புரை

நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் தமிழ்நாடு தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகன பரப்புரை பயணம் 12_07_2024 மதியம் 2.00 மணி அளவில் திருமங்கலத்தில் பிரச்சார பரப்புரை பயணம் நடைபெற்றது. இதில் பயணத் தலைவர் திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரப் பாண்டியனும், பயண ஒருங்கிணைப்பாளர் சு.இனியனும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நகர தலைவர் மு.சண்முகசுந்தரம் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட செயலாளர் பா.முத்துகருப்பு தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் த.மா.எரிமலை, பகுத்தறிவாளர்கள் எம்.தங்கதுரை, காப்பாளர் சீனபாண்டியன், மாவட்ட செயலாளர் இரா.கலைச்செல்வி ஆகையூர் முன்னிலை வகித்தனர்.சட்டக் கல்லூரி மாணவர் கழக மாநில அமைப்பாளர் மு. இளமாறன் சிறப்புரை ஆற்றினார். திராவிடர் கழக அனைத்து அணியைச் சேர்ந்த தோழர்களும் தோழமை இயக்க தோழர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment