நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் எழுச்சியுடன் இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 12, 2024

நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் எழுச்சியுடன் இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணம்!

featured image

கன்னியாகுமரி முதல் குழு

நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் தமிழ்நாடு தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகன பரப்புரை பயணம் 11.7.2024 காலை 9.30 மணி அளவில் கன்னியாகுமரி காந்தி மண்டபம் அருகில் இருந்து தொடங்கியது. பயணத்தினை திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஒரத்தாநாடு இரா.குணசேகரன் தொடங்கி வைத்தார்.

இதில் பயணத் தலைவர் திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரப்பாண்டியன், பயண ஒருங்கிணைப்பாளர் சு.இனியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த தொடக்க நிகழ்ச்சியில் பகுத்தறிவாளக் கழக மாவட்ட தலைவர் உ. சிவதானு அவர்கள் வரவேற்பு உரையாற்றினார். மாவட்ட தலைவர் மா.மு. சுப்ரமணியம் அவர்கள் தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் கோ. வெற்றிவேந்தன் அவர்கள் தொடக்க உரையாற்றினார். சட்டக் கல்லூரி மாணவர் கழக மாநில அமைப்பாளர் மு. இளமாறன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் திராவிட கழக பொதுக்குழு உறுப்பினர் மா.மணி, திமுக ஒன்றிய செயலாளர் பா.பாபு, கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், மாவட்ட இளைஞரணி தலைவர் இரா.ரமேஷ், மாநகர செயலாளர் மு.ராஜசேகர், கோட்டார் பகுதி தலைவர் ச.ச. மணிமேகலை மற்றும் திராவிடர் கழக திராவிட முன்னேற்ற கழக தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர். கன்னியாகுமரி கிளைக் கழக அமைப்பாளர் க.யுவான்ஸ் அவர்கள் நன்றி உரையாற்றினார்.

நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் தமிழ்நாடு தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகன பரப்புரை பயணம் 11.7.2024 காலை 11.00 மணி அளவில் நாகர்கோவில் கோட்டாறு பகுதியில்பிரச்சார பரப்புரை பயணம் நடைபெற்றது. பயணத்தினை திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஒரத்தாநாடு இரா.குணசேகரன் தொடங்கி வைத்தார். இதில் பயணத் தலைவர் திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரப் பாண்டியன், பயண ஒருங்கிணைப்பாளர் சு.இனியன் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கோட்டாறு பகுதி தலைவர் மணிமேகலை வரவேற்பு உரையாற்றினார். இலக்கிய அணி செயலாளர் பொண்ணுதாசன் தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் கோ. வெற்றிவேந்தன் தொடக்க உரையாற்றினார். சட்டக் கல்லூரி மாணவர் கழக மாநில அமைப்பாளர் மு. இளமாறன் சிறப்புரை ஆற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் நடைபெற்ற திராவிட கழக பொதுக்குழு உறுப்பினர் மா.மணி, திமுக ஒன்றிய செயலாளர் பா.பாபு, கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், மாவட்ட இளைஞரணி தலைவர் இரா.ரமேஷ், மாநகர செயலாளர் மு.ராஜசேகர், கோட்டார் பகுதி தலைவர் ச.ச. மணிமேகலை மற்றும் திராவிடர் கழக திராவிட முன்னேற்ற கழக தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர். மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜேஷ் நன்றி உரையாற்றினார்.

புதுச்சேரி 3ஆம் குழு

கொடியசைத்து தொடங்கி வைத்தவர்: சிவ.வீரமணி.
சிறப்புரை: சே.மெ. மதிவதனி.
தலைமை: மாவட்ட தலைவர் வே.அன்பரசன்,
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள்
1 இரா.சிவா, சட்டமன்ற எதிர் கட்சி தலைவர், மாநில திமுக அமைப்பாளர், 2. வழக்குரைஞர் மு.சாமிநாதன் பொதுச் செயலாளர் காங்கிரஸ், 3. இரா. ராஜாங்கம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க் லிஸ்ட். 4.கீதநாதன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, 5.தமிழ்மாறன் விடுதலை சிறுத்தைகள் கட்சி, 6.இளங்கோ மதிமுக,
மாணவர் கழகம்: 1.எஸ்.பி. மணிமாறன், திமுக மாணவர் அணி, 2.சோ. பிரிவின் குமார் இந்திய மாணவர் சங்கம், 3.இரா. தமிழ்வாணன் முற்போக்கு மாணவர் கழகம், 4.சுவாமிநாதன் புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர் கூட்டமைப்பு, 5.மு.முரளி அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் மற்றும் புதுச்சேரி மாநில பல்வேறு சமூக அமைப்பைச் சேர்ந்தவர்களும் திராவிடர் கழக தோழர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
முன்னிலை வகித்தவர்கள்: மாநில ப.எ.ம.து.பொ இளவரசி சங்கர், காப்பாளர்கள் இரா.சடகோபன், இர.ராசு, மு.குப்புசாமி, லோ.பழனி, கோ.மு. தமிழ்ச்செல்வன், விலாசினி ராசு, வீர. இளங்கோவன்.
புதுச்சேரியில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இருசக்கர வாகன பரப்புரை பயணம் தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது.
தலைமை: மாவட்ட தலைவர் வே.அன்பரசன், முன்னிலை மாநில ப.எ.ம.து.பொ இளவரசி சங்கர், காப்பாளர்கள் இரா.சடகோபன், இர.ராசு, மு.குப்புசாமி, லோ.பழனி, கோ.மு. தமிழ்ச்செல்வன், விலாசினி ராசு, வீர. இளங்கோவன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தம்பி பிரபாகரன்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள் வழக்குரைஞர் மு.சாமிநாதன், பொதுச் செயலாளர் காங்கிரஸ், இரா.சிவா சட்டமன்ற எதிர் கட்சி தலைவர் திமுக அமைப்பாளர், கீதநாதன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இரா. ராஜாங்கம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க் லிஸ்ட், தமிழ்மாறன் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இளங்கோ மதிமுக, மாணவரணி எஸ்.பி.சிவகுமார் திமுக மாணவர் கழகம், சோ. பிரிவின் குமார் இந்திய மாணவர் சங்கம், இரா. தமிழ்வாணன் முற்போக்கு மாணவர் கழகம், சுவாமிநாதன் புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர் கூட்டமைப்பு, மு.முரளி அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் மற்றும் புதுச்சேரி மாநில பல்வேறு சமூக அமைப்பைச் சேர்ந்தவர்களும் திராவிடர் கழக தோழர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர். சிவ.வீரமணி பரப்புரைப் பயணத்தைத் தொடங்கி வைத்தார்.

மடத்துக்குளம் (தாராபுரம் நான்காம் குழு)

தாராபுரம் நான்காம் குழுவின் பரப்புரை பயணத்தை மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்

தாராபுரம் அண்ணா சிலை அருகில் 11-07-2024 காலை 10 மணி அளவில் நீட் எதிர்ப்பு வாகன பரப்புரை பயணத்தில் தாராபுரம் நான்காம் குழுவிற்கு க. கிருஷ்ணன் மாவட்ட தலைவர் தலைமை தங்கினார்.

மாவட்ட செயலாளர் தம்பி பிரபாகரன், பொதுக்குழு உறுப்பினர்கள் புள்ளியான், மயில்சாமி, தாராபுரம் நகர தலைவர் இரா சின்ன பிரகாஷ், நகரச் செயலாளர் தாராபுரம் முத்தரசன், மாநில இளைஞரணி துணை செயலாளர் வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வாகன பரப்புரை பயணக் குழு தலைவர் த.சிவ பாரதி, வாகன பரப்புரை பயண ஒருங்கிணைப்பாளர் மு.வீரமணி ஆகியோர் பரப்புரை பயணத்தை வழிநடத்தி சென்றனர்.

மாநில ஒருங்கிணைப்பாளர் இரா ஜெயக்குமார் பரப்புரை பயணத்தை தொடங்கி வைத்தார்.

பரப்புரை பயணத்தில் கழக சொற்பொழிவாளர் த. மு. யாழ் திலீபன் சிறப்புரையாற்றினார்.

பரப்புரை பயணத்தை வாழ்த்தி திமுக மாவட்ட வழக்குரைஞரணி தலைவர் செல்வராசு, திமுக நகர செயலாளர் சு. முருகானந்தம், தேசியவாத காங்கிரஸ் தலைவர் செந்தில் குமார், மாவட்ட செயலாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தமிழ் முத்து, தமிழ் புலிகள் கட்சி மாநில துணை செயலாளர் முகிலரசன் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி, ஆதி தமிழர் கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட
கட்சியினர் பங்கேற்று வாழ்த்தினர்.

நீட் எதிர்ப்பு வாகன பரப்புரை பயணம் தாராபுரம் நான்காம் குழுவின் பரப்புரை மடத்துக்குளம் கணியூர் நகரத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு மாவட்டசெயலாளர் தம்பி பிரபாகரன் தலைமை தாங்கினார்.

ப.க மாவட்ட தலைவர் தோழர் தங்கராசு, பொதுக்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், புள்ளியான், மயில்சாமி, தாராபுரம் நகர தலைவர் இரா.சின்ன பிரகாஷ், நகரச் செயலாளர் தாராபுரம் முத்தரசன், மாநில இளைஞரணி துணை செயலாளர் வினோத், பள்ளபாளையம் குழந்தைவேல், காரத்தெரு நாகராஜ், ந. செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வாகன பரப்புரை பயணக் குழு தலைவர் த.சிவ பாரதி, வாகன பரப்புரை பயண ஒருங்கிணைப்பாளர் மு.வீரமணி ஆகியோர் பரப்புரை பயணத்தை வழிநடத்தி சென்றனர். மாநில ஒருங்கிணைப்பாளர் இரா ஜெயக்குமார் அவர்கள் பரப்புரை பயணத்தை தொடங்கி வைத்தார். பரப்புரை பயணத்தில் கழக சொற்பொழிவாளர் த. மு. யாழ் திலீபன் சிறப்புரையாற்றினார்.

நீட் எதிர்ப்பு வாகன பரப்புரை பயணம் தாராபுரம் நான்காம் குழுவின் பரப்புரை உடுமலைப்பேட்டை நகரத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு தம்பி பிரபாகரன் மாவட்டசெயலாளர் தலைமை தங்கினார். தமிழ் நிழவன் மாவட்ட இளைஞர் செயலாளர் வரவேற்புரையாற்றினார். ராமச்சந்திரன் மாவட்ட இளைஞரணி செயலாளர், கலையரசன் நகரச் செயலாளர், பெரியார் பித்தன் ஒன்றிய செயலாளர், தோழர் தங்கராசு, ப.க மாவட்ட தலைவர் ஆறுமுகம், புள்ளியான், மயில்சாமி பொதுக்குழு உறுப்பினர்கள், இரா சின்ன பிரகாஷ் தாராபுரம் நகர தலைவர், முத்தரசன் நகரச் செயலாளர் தாராபுரம், வினோத் மாநில இளைஞரணி துணை செயலாளர், குழந்தைவேல் பள்ளபாளையம், நாகராஜ் காரத்தெரு, ந. செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வாகன பரப்புரை பயணம் குழு தலைவர் த.சிவ பாரதி, வாகன பரப்புரை பயணம் ஒருங்கிணைப்பாளர் மு.வீரமணி ஆகியோர் பரப்புரை பயணத்தை வழிநடத்தி சென்றனர். மாநில ஒருங்கிணைப்பாளர் இரா ஜெயக்குமார் அவர்கள் பரப்புரை பயணத்தை தொடங்கி வைத்தார். பரப்புரை பயணத்தில் கழக சொற்பொழிவாளர் த. மு. யாழ் திலீபன் சிறப்புரையாற்றினார். நீட் தேர்வு எதிர்ப்பு ஏன்? 100 புத்தகங்களை திமுக உடுமலைப்பேட்டை நகர செயலாளர் c. வேலுச்சாமி அவர்கள் கழக ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் அவர்களிடம் பெற்றுக்கொண்டார்.

இராமநாதபுரம் (இரண்டாவது குழு)

‘நீட்’ தேர்வு ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிட கழக இளைஞரணி மாணவர் கழகம் சார்பில் தமிழ்நாடு தழுவிய மாபெரும் இருசக்கர வாகன பரப்புரை (இரண்டாவது குழு) இராமநாதபுரம் அரண்மனை அருகில் இருந்து நேற்று (11-7-2024) காலை 10 மணிக்கு புறப்பட்டது.

இந்த நிகழ்வில் தலைமை கழக அமைப்பாளர் கே.எம்.சிகாமணி, தலைமையில் மாவட்ட தலைவர் எம்.முருகேசன், மாவட்ட செயலாளர் அண்ணா.ரவி, மாவட்ட மீனவர் சங்க தலைவர் ராமச்சந்திர ராம வன்னி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் பேரின்பம் ஆகியோர் முன்னிலையில் பயண குழு தலைவர் மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி தலைமையில் பரப்புரை பயணகுழு ஒருங்கிணைப்பாளர் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அஜெ.உமாநாத் முன்னிலையில் சொற்பொழிவாளர் தே.நர்மதா சிறப்புரையாற்றினார்.

No comments:

Post a Comment