அரூர், ஜூலை 9- அரூர் கழக மாவட்டம் கடத்தூர் ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டம் 7-7-2024 ஆம் தேதி கடத்தூர் தமிழ்ச்செல்வி அச்சகத்தில், ஒன்றிய கழக தலைவர் பெ. சிவலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
நகர கழக செயலாளர் புலவர் இரா.நெடுமிடல் வரவேற்புரை ஆற்றினார். மாநில இளைஞரணி துணை செயலாளர் மா.செல்லதுரை கடவுள் மறுப்பு கூறி நீட் ஒழிப்பு இருசக்கர வாகன பயண பரப்புரை கூட்டத்தை நடத்துவது தொடர்பாக முன்னுரையாற்றினார்.
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஒன்றிய அரசை வலியுறுத்தி கழக இளைஞரணி சார்பில் புதுச்சேரியில் இருந்து சேலம் வரை நடைபெறும் நீட் ஒழிப்பு பயணம் ஜூலை 15 ஆம் தேதி அரூர் கழக மாவட்டத்தில் பரப்புரை பயணம் மேற்கொள்ளும் குழுவை கடத்தூரில் சிறப்பாக வரவேற்று, அனைத்து கட்சியினர் பங்குபெறும் வகையில் ஏற்பாடுகளை செய்வதோடு கழக கொடி கட்டுவது, துண்டறிக்கை விநியோகம் செய்வது, சுவரொட்டி ஒட்டுவது போன்ற பணிகளை சிறப்பாக மாணவர் கழகம், இளைஞரணி தோழர்கள் செய்து தர அறிவித்துள்ளனர்.
பங்கேற்றோர்
இந்நிகழ்ச்சியில் கழக காப்பாளர்
அ. தமிழ்ச்செல்வன், மாவட்ட இளைஞரணி தலைவர் த. மு.யாழ்திலீபன், ஒன்றிய பகுத்தறிவாளர் கழக செயலாளர் சொ.பாண்டியன், விடுதலை வாசகர் வட்ட தலைவர் வா. நடராஜன், தருமபுரி நகர இளைஞரணி செயலாளர் ராமச்சந்திரன், பொம்மிடி நகர தலைவர் இரா.ஆனந்தன், துணைச் செயலாளர் பிரகாசம், இளைஞரணி மாணவர் கழகப் பொறுப்பாளர்கள் அரிகரன், சூர்யா, பிரதாப் சிந்தல்பாடி பச்சையப்பன், மாதவன், புது ரெட்டியூர் தோழர்கள் கலந்துகொண்டு பரப்புரை பயணம் சிறப்பாக நடத்திட ஆலோசனை கூறினர்.
No comments:
Post a Comment