ஒன்றிய அமைச்சரின் பொறுப்பற்ற பேச்சு இடைக்கால நிவாரணம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 11, 2024

ஒன்றிய அமைச்சரின் பொறுப்பற்ற பேச்சு இடைக்கால நிவாரணம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை, ஜூலை 11- பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த நபர் தான் காரணம் என மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக திமுக சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், இரு பிரிவினரிடையே கலவரத்தை தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் ஷோபா கரந்தலஜே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஷோபா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர். ஹரிபிரசாத் ஆஜராகி, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.காவல்துறை சார்பில் வழக்குரைஞர் கே.எம்.டி. முகிலன் ஆஜராகி, வழக்கின் விசாரணையை வரும் 12.7.2024ஆம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.அவ்வாறு ஒத்திவைப்பதாக இருந்தால் கடும் நடவடிக்கை எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டுமென மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் கேட்டுக்கொண்டார்.இடைக்கால நிவாரணம் வழங்க மறுப்பு தெரிவித்த நீதிபதி குண்டு வைத்தவர்கள் தமிழ்நாட்டில் பயிற்சி எடுத்தது முன்னதாகவே தனக்கு தெரிந்திருக்கும் பட்சத் தில் பொறுப்பான குடிமகன் என்ற முறையில் முன்கூட்டியே காவல்துறைக்கு தகவல் அளித்திருக்க வேண்டும் என கூறினார். இதனையடுத்து, வழக் கின் விசாரணையை வரும் 12.7.2024ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

No comments:

Post a Comment