தேனி. ஜூலை 9- தேனி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், நம்மால் முடியும் சேவை நல சங்கம் இரண்டும் இணைந்து பெரியகுளம், கீழ வடகரை, அழ கர்சாமிபுரம், காளியம்மன் கோவில் தெரு, சத்துணவு கூடத்தில் 7.7.2024. ஞாயிறு காலை 10 மணி அளவில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு தேனி மாவட்ட பகுத்தறி வாளர் கழக செயலாளர் அ. மோகன் தலைமை ஏற்று நடத்தினார்.
அழகர்சாமிபுரம் கிளை ப க. தலைவர் இப்ராஹிம் பாட்ஷா வரவேற்புரை நிகழ்த்தினார். நம்மால் முடியும் நல சேவை சங்கம் தலைவர் .அ. மாரிமுத்து தொடக்க உரையாற்றினார்.
ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி செல்வராஜ். பகுத்தறிவாளர் கழக கிளை பொருளாளர் வழக்குரைஞர் காமராஜ், பகுத்தறிவாளர் கழக மாவட்ட பொருளாளர் கருப்பணன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
விழாவில், திராவிட முன்னேற்ற கழக பெரியகுளம் வடக்கு ஒன்றிய செயலாளர் வழக்குரைஞர் எல்.எம்.. பாண்டியன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே..எஸ். சரவணகுமார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
விழாவில் பத்தாம் வகுப்பு மற் றும் பன்னிரண்டாம் வகுப்பில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரூபாய் 1000/ ஆயிரம் வீதம் 4000/- ரூபாய் பரிசாக வழங்கி பாராட்டபட்டது. மேலும் 75 மாணவ மாணவிகளுக்கு பேனா, பென்சி, குறிப்பேடுகள் வழங்கி பாராட்டப்பட்டது. விழாவில் நம்மால் முடியும் சேவை நல சங்கத்தின் பொறுப்பாளர்கள், பகுத்தறிவாளர் கழகத்தினர், பொறுப்பாளர்கள், ஊர் முக்கிய தலைவர்கள், மற்றும் விழுதுகள், அருந்தமிழ் ஆசிரியர் கூட்டமைப்பு, தேனி மாவட்டம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், பெரியகுளம் நகர பக. பொருளாளர் மோகன் காமராஜ். முருகன். எழுத்தாளர் அறிவழகன், காலனி. பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ஜெயராஜ், பகுத்தறிவாளர் கழகத் துணை தலைவர் மோகன், செந்தில் குமார், பெற்றோர்கள், பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இறுதியில் நம்மால் முடியும் சேவை நல சங்கத்தின் சார்பில் நன்றி கூறிட நிகழ்வு இனிமையுடன் முடிவுற்றது.
No comments:
Post a Comment