நீட் தேர்வு எதிர்ப்பு - இரு சக்கர வாகன பேரணியை வரவேற்று பிரச்சாரம் செய்வோம் - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 7, 2024

நீட் தேர்வு எதிர்ப்பு - இரு சக்கர வாகன பேரணியை வரவேற்று பிரச்சாரம் செய்வோம்

8-15

கும்மிடிப்பூண்டி கழக கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

கும்மிடிப்பூண்டி, ஜூலை 7- கும்மிடிப்பூண்டி மாவட்டம் பெரியபாளை யத்தில் நடைபெற்ற கலந் துரையாடல் கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் புழல் ஆனந்தன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் கருத்துரை வழங்கிய தலைமை கழக அமைப்பாளர் பொன்னேரி வி.பன்னீர் செல்வம் அவர்கள் வரவேற்பு கூட்டத்தை மிக சிறப்பாக நடத்த பல்வேறு கருத்துகளை வழங்கினார்.

குறிப்பாக மாவட் டத்தில் உள்ள அனைத்து அணியின் பொறுப்பாளர்களும் பங்கேற்கவேண்டும் என்று அறிவுறுத்தினார்.பங்குபெற்ற தோழர்களின் கருத்துகளின் பிறகு மாவட்ட செயலாளர் பாஸ்கர் நன்றி கூறிட கூட்டம் இனிதே முடிந்தது.

தீர்மானங்கள்

எல்லாபுரம் ஒன் றிய செயலாளர் பெரிய பாளையம் அருணகிரி அவர்களின் தந்தையும், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆகாஷ் அவர்களின் தாத்தாவான அய்யாவு அவர்களின் மறைவுக்கு ஆழந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
நீட் தேர்வு எதிர்ப்பு இரு சக்கர வாகன பேரணியை வரவேற்று கழக கொடிகளுடன் மிக சிறப்பாக பிரச்சா ரம் செய்வது என தீர்மா னிக்கப்பட்டது.

கூட்டத்தில் பங்கு பெற்ற தோழர்கள்

புழல் நகர தலைவர் சோமு, புழல் ஒன்றிய கழக செயலாளர் வட கரை உதயகுமார் மாவட்ட ப.க தலைவர் ஓவியர் ஜனாதிபதி, பொன்னேரி நகர தலைவர் வே. அருள், மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் கெ. முருகன், பொன்னேரி நகர செயலாளர் சுதாகர், கும்மிடிப்பூண்டி ஒன்றிய செயலாளர் ராமு, பொன்னேரி வினோத், மாவட்ட இளைஞரணி தலைவர் சோழவரம் ப. சக்ரவர்த்தி, பொன்னேரி நகர இளைஞரணி செய லாளர் சுகன்ராஜ்.

No comments:

Post a Comment