மலிவு விலை பதிப்பும்... மக்கள் மத்தியில் பிரச்சாரமும்... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 9, 2024

மலிவு விலை பதிப்பும்... மக்கள் மத்தியில் பிரச்சாரமும்...

திராவிடர் கழகத் தோழர்களுக்கு என்று எப்போதும் ஒரு தனி பண்பு உண்டு. திராவிடர் கழக தலைமை எப்போதெல்லாம் தமிaழ்நாட்டில் பற்றி எரியும் பிரச்சினைகளை குறித்து மலிவு விலை பதிப்பு வெளியிடுகிறதோ அப்போதெல்லாம் தந்தை பெரியாருக்கே உரிய ”சிக்கனப் பண்புடன்”அந்தக் குறிப்பிட்ட மலிவு விலை பதிப்பின் நூல்களை தோழர்கள் அதிகமாக வாங்கி வைத்துக் கொள்கின்ற னர் என்பது அனைவரும் அறிந்ததே.
ஆனால், தாராபுரம் கழகத் தோழர்கள் இதில் சற்று மாறுபட்டு ஒரு புதிய அனுபவத்தை அடுத்த தலைமுறை கருஞ்சட்டை தொண்டர்களுக்கு களப்பணியை ஆற்றுவது குறித்து வழிநடத்திச் செல்கின்றனர்.
தலைமை வெளியிட்ட அந்த மலிவு விலை பதிப்பு நூல்களை மாநாடு நோக்கி, பொதுக்கூட்டத்திற்கு செல்கிற போது பேருந்தில் ஒருவர் அந்த நூல்களைப் பற்றி சத்தமாக விவரித்துக் கூற மற்ற தோழர்கள் நூல்களை மக்களிடம் விற்பனை செய்கின்றனர். இப்படியாக பேருந்து மாறிக் கொண்டே இருக்க விற்பனையும் நடந்து கொண்டே செல்கிறது. இதில் ஒரு முக்கிய அம்சம் நூல் விற்பனை மூலம் கிடைக்கிற தொகை வழிச் செலவிற்கேயாகும்.
இந்தப் பிரச்சார யுக்தி தந்தை பெரியாரின் கருத்துகளை, தமிழர் தலைவரின் வலுவான செய்திகளை எளிய மக்கள் மத்தியிலும் ஊடுருவிச் செல்லப் பயன்படுகிறது.
– பெரியார் குயில், தாராபுரம்.

No comments:

Post a Comment