ஊருக்குத்தான் உபதேசமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 8, 2024

ஊருக்குத்தான் உபதேசமா?

featured image

கருநாடகாவில் பாஜக எம்.பி. சார்பில்
கட்சி தொண்டர்களுக்கு மதுபானம் வழங்கப்பட்டதால் சர்ச்சை: காங்கிரஸ் கண்டனம்

சிக்கபல்லப்பூர், ஜூலை 8 கருநாடகா வில் பாஜக நாடாளுமன்ற உறுப்பி னர் சுதாகர் சார்பில் கட்சி தொண்டர்களுக்கு மதுபானம் வழங்கப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் சிக்கபல்லப்பூர் தொகுதி யில் சுதாகர் வெற்றி பெற்றார். சிக்கபல்லப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுதாகர் , தனக்காக தேர்தல் பணியாற்றிய பா.ஜ.க., ஜே.டி.எஸ். கட்சியினருக்கு நேற்று (7.7.2024) நெலமங்கலாவில் விருந்தளித்தார். அசைவ உணவுடன் நடத்தப்பட்ட விருந்தில் தொண்டர்களை வரிசையாக நிற்க வைத்து மது பாட்டில்கள் வழங்கப்பட்டன. இந்த நிலையில், பாஜக எம்பி சார்பில் மதுபானம் விநியோகம் செய்த காட்சிப்பதிவு வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மதுபானம் வாங்க பா.ஜ.க., ஜே.டி.எஸ். தொண்டர்கள் பல்லாயிரக்கணக்கானோர் திரண்ட தால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பா.ஜ.க.வைச் சேர்ந்த கருநாடக எதிர்க்கட்சி தலைவர் அசோக், மேனாள் சட்டப்பேரவை உறுப்பினர் நாகராஜ் மற்றும் ஜேடிஎஸ் எம்.எல்.சி. நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

பா.ஜ.க. எம்.பி. சார்பில் மதுபானம் விநியோகிக்கப்பட்டதற்கு கருநாடக அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கண்டனம் தெரி வித்துள்ளார். பா.ஜ.க.வினர் பேசுவது ஒன்றாகவும் செயல்பாடு வேறு விதமாகவும் இருப்பதாக தினேஷ் குண்டுராவ் விமர்சனம் செய்தார். கருநாடகாவில் டெங்கு பரவி வரும் நிலையில் பா.ஜ.க.வினர் மதுபானம் விநியோகிப்பதில் கவனம் செலுத்துவதாகவும் குற்றச்சாட்டு வைத்தார்.
மதுபானம் வழங்குவதுதான் பா.ஜ.க. கலாச்சாரமா? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. மதுவிநியோகம் குறித்து பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டா பதில் அளிக்க வேண்டும் என கருநாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment