விழுப்புரம், ஜூலை 8- தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சமூக நீதிக்கு எதிராக ஸநாதனத்தை திணிக்கும் ஒன்றிய பாஜக அரசின் தேசிய தகுதி நுழைவுத் தேர்வு (நீட்) என்னும் நஞ்சை அழிக்க வேண்டி கழகத்தின் மாணவர்- இளைஞர் படையை களம் இறக்கி இருசக்கர வாகன பயணத்தின் ஊடாக பரப்புரை மேற்கொள்ள அறிவிப்பை வரவேற்றும் களப்பணியில் விழுப்புரம் மாவட்டத்தின் பங்களிப்பின் அவசியம் கருதி 4.7.2024 காலை 10:30 மணி அளவில் கண்டாச்சிபுரம் நகரத் தலைவர் நாகராசன் இல்லத்தில் மாவட்ட தலைவர் சே.வ.கோபண்ணா அவர்கள் தலைமையில் மாவட்ட செயலாளர் அரங்க பரணிதரன் அவர்கள் வரவேற்க மாநில அமைப்பாளர் தா.இளம்பருதி மாநில இளைஞரணி துணை செயலாளர் தம்பி பிரபாகரன் திண்டிவனம் கழக மாவட்ட செயலாளர் சே.பரந்தாமன் ஆகியோர் முன்னிலை ஏற்க வாகன பிரச்சார குழு தலைவர் தா.தம்பி பிரபாகரன் அவர்களின் நோக்க உரையுடன் மாவட்ட துணை செயலாளர் ஏ.ரமேசு, மாவட்ட இளைஞரணி தலைவர் அ.சதீசு – செயலாளர் பகவான் தாஸ், விழுப்புரம் நகர தலைவர் பூங்கான் – செயலாளர் பழனிவேல், செஞ்சி நகரம் தா.நந்தகுமார், ஒன்றிய அமைப்பாளர் சுரேசு, மாணவர் கழகத் தோழர் கிருஷ்ண பாண்டியன், கண்டாச்சிபுரம் நகர செயலாளர் முருகன் உள்ளிட்ட அனைவரும் கருத்துரை வழங்கினர். அவர்களுக்கு கடந்தகால இயக்கப் பணிகளை பாராட்டும் முகமாக பயனாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டதுடன் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இருசக்கர வாகன பரப்புரை பயணத்தில் அதிக அளவு தோழர்களை பங்கேற்க செய்வதுடன் பதாகைகள் மற்றும் கழக கொடிகள் நட்டும்,வரவேற்றும் அவர்களுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குவதென தீர்மானிக்கப்பட்டது.
இல்லந்தோறும் விடுதலை எனும் இலக்கை நோக்கி சந்தாதாரர் களையும் வாசகர்களையும் உருவாக்க தீர்மானிக்கப்பட்டது.
பண்பட்ட சமுதாயத்தை கட்டி அமைப்பதின் தேவை அறிந்து இயக்கத்தை பலப்படுத்தி களப்பணியை தீவிரப் படுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட தலைவர் ப. சுப்புராயன், கண்டாச்சிபுரம் நகரத் தலைவர் ஏழுமலை, செஞ்சி நகரத் தலைவர் சு.அண்ணாமலை மற்றும் விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
No comments:
Post a Comment