தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (TADHCO) ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் ஒரு பகுதியாக இளைஞர்களுக்கு ரோபோடிக்ஸ் பயிற்சி அளிக்க உள்ளது.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த இளைஞர்களுக்கான இந்த பயிற்சியில், இதற்கு செலவாகும் தொகையை தாட்கோவே செலுத்திவிடும் எனவும், இளைஞர்கள் எந்தவித கட்டணமும் செலுத்த தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
பயிற்சி விவரங்கள்: பயிற்சி காலம் மூன்று மாதங்கள் ஆகும். இந்த மூன்று மாதங்களில் மருத்துவத்துறை ரோபோடிக்ஸ், ஏ.அய். ரோபோடிக்ஸ் போன்ற பல்வேறு ரோபோடிக்ஸ் துறை பற்றி வகுப்புகள் எடுக்கப்படும்.
பயிற்சியின் முடிவில் பயிற்சி முடித்ததற்கான சான்றிதழும், வேலை வாய்ப்பும் ஏற்படுத்தி தரப்படும்.
யார் விண்ணப்பிக்கலாம்: ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த படித்த 18 முதல் 35 வயதிற்குட்பட்ட பட்டதாரி இளைஞர்கள் அனைவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
தொடர்ந்து விண்ணப்பிக்க விரும்பும் இளைஞர்கள் https://iei.tahdco.com/rob_reg.php என்ற வலைத்தளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்.
மேலும் இது பற்றிய விவரங்கள் தாட்கோவின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் கொடுக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment