இரு சக்கர வாகன பரப்புரையாளர்களுக்கு சிறப்பான வரவேற்பு உரத்தநாடு வடக்கு ஒன்றிய - நகர கலந்துரையாடலில்முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 13, 2024

இரு சக்கர வாகன பரப்புரையாளர்களுக்கு சிறப்பான வரவேற்பு உரத்தநாடு வடக்கு ஒன்றிய - நகர கலந்துரையாடலில்முடிவு

featured image

உரத்தநாடு, ஜூலை 13– நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி இருசக்கர வாகன பரப்புரை மேற்கொண்டு வருகை தரும் குழுவினரை சிறப்பாக வரவேற்று கூட்டங்களை எழுச்சியுடன் நடத்துவது என உரத்தநாடு வடக்கு ஒன்றிய – நகர கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டது.
உரத்தநாடு வடக்கு ஒன்றிய – நகர திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 11-07-2024 அன்று மாலை 6 மணி அளவில் உரத்தநாடு பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது. மாவட்ட திராவிடர் கழக தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தலைமையேற்று உரையாற்றினார்.

மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, வடக்கு ஒன்றிய தலைவர் இரா.துரைராசு உரத்தநாடு நகர தலைவர் பேபி ரெ.ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலையேற்று உரையாற்றினர். உரத்தநாடு வடக்கு ஒன்றிய செயலாளர் அ.சுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
நகர இளைஞரணி தலைவர் பொறியாளர் ச.பிரபாகரன் கடவுள் மறுப்பு கூறினார். தொடர்ந்து வடக்கு ஒன்றிய துணை செயலாளர் கக்கரை கோ.இராமமூர்த்தி, ஊரச்சி கிளைக்கழக செயலாளர் அ.திருநாவுக்கரசு, நகர இளைஞரணி செயலாளர் மா.சாக்ரடீஸ், ஒன்றிய தொழிலாளர் அணி தலைவர் ரெ.சதீஷ்குமார், நகர செயலாளர் பு.செந்தில்குமார், ஒன்றிய விவசாய அணி தலைவர் கோவி.இராமதாசு, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் முனைவர் வே.இராஜவேல் ஆகியோர் கருத்துரையாற்றினார்.

கூட்டத்தில். நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர்கழக இளைஞர் அணி திராவிட மாணவர் கழகம் சார்பில் இராமநாதபுரத்தில் ஜூலை 11 தொடங்கி ஜூலை 15 சேலத்தில் சங்க மிக்கும் இருசக்கர வாகன பரப்புரைப் பயணம் மேற்கொண்டு வருகை தரும் வரும் இரண்டாவது குழுவினரை 14.07.2024 அன்று உரத்தநாடு, மேல உளூர் ஆகிய ஊர்களில் சிறப்பான முறையில் வரவேற்று, பொதுமக்களிடையே நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி உரையாற்ற செய்வது எனவும், உரத்தநாடு வடக்கு ஒன்றியம் மற்றும் நகரத்தில் உள்ள அனைத்து அணிகளின் பொறுப்பாளர்கள் தோழர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்வது எனவும், நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி பிரச்சார பெரும் பயணம் மேற்கொண்டு வரும் இரண்டாவது குழுவினருக்கு மாவட்டச் செயலாளர் அ.அருண கிரி, ஊரச்சி கிளைக் கழக செயலாளர் அ.திருநாவுக்கரசு, நகர இளைஞரணி செயலாளர் மா.சாக்ரடீஸ் ஆகியோர் ஏற்பாட்டில் ஊரச்சியில் 14.7.2024 அன்று மதிய உணவு விருந்து வழங்கப்படும் எனவும், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு குடிஅரசு நூற்றாண்டு விழா மற்றும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி உரத்தநாடு வடக்கு ஒன்றியம் மற்றும் நகரத்தில் பொதுக்கூட்டங்களாக நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

No comments:

Post a Comment