தஞ்சை மாவட்ட கலந்துரையாடலில் முடிவு
தஞ்சாவூர், ஜூலை 12- தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரை யாடல் கூட்டம் 09-07-2024 செவ்வாய் மாலை 6 மணி அளவில் தஞ்சாவூர் கீழ ராஜவீதி பெரியார் இல்லத்தில் நடைபெற்றது.
மாவட்ட கழக தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தலைமையேற்று உரையாற்றி னார். மாவட்ட செயலாளர் அ.அருண கிரி அனைவரையும் வரவேற்று உரை யாற்றினார். மாநகர இளைஞரணி துணைத் தலைவர் பெரியார் செல்வன் கடவுள் மறுப்பு கூறினார். தொடர்ந்து மாநகர இணைச் செயலாளர் இரா. வீரக்குமார், மாநகர செயலாளர் செ.தமிழ்ச்செல்வன், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் அ.இராமலிங்கம், மகளிர் அணி பொறுப்பாளர்கள் அ.கலைச்செல்வி, ஜெயமணி, பா.பொன்னி, பூதலூர் ஒன்றிய தலைவர் இரா.பாலு, செயலாளர் ரெ. புகழேந்தி, மாவட்ட அமைப்பாளர் மா.வீரமணி, திருக்காட்டுப்பள்ளி இஸ்மாயில், தஞ்சை வடக்கு ஒன்றிய செயலாளர் காசி.அரங்கராசன், அம்மாபேட்டை ஒன்றிய தலைவர் கி.ஜவகர், அம்மா பேட்டை ஒன்றிய துணைச் செயலாளர் ராஜேந்திரன், திருவையாறு ஒன்றிய தலைவர் ச.கண்ணன், தஞ்சை கரந்தை பகுதி தலைவர் விஜயன், பகுதி செயலாளர் தனபால், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ச.அழகிரி, ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய தலைவர் த.ஜெகநாதன், ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய செயலாளர் மநல்.பரமசிவம், திருவையாறு கவுதமன், மாநகர பகுத்தறிவாளர் கழக செயலாளர் நாகநாதன், திருவையாறு ஒன்றிய அமைப்பாளர் விவேக விரும்பி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றி குமார், மாநில பகுத்தறிவாளர்கழக அமைப்பாளர் கோபு.பழனிவேல், மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன் தலைமைக் கழக அமைப்பாளர் க.குருசாமி, காப்பாளர் மு. அய்யனார் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. குணசேகரன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் பங்கேற்று உரையாற்றினர்.
இறுதியாக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் மாவட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும் மாவட்டம் முழுவதும் அமைப்பை வலுப்படுத்த பிரச்சாரக் கூட்டங்களை தொடர்ந்து நடத்துவதின் அவசியம் குறித்தும் நீட் தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தி வருகை தரும் இருசக்கர வாகன பரப்புரை குழுவினரை சிறப்பாக வரவேற்று கூட்டங்களை எழுச்சியிடன் நடத்த வேண்டிய அவசியம் குறித்தும் உரையாற்றினார்.
மாநகர இளைஞரணி துணைத் தலைவர் பெரியார் செல்வன் நன்றி கூறினார்.
கூட்டத்தில், அம்மாபேட்டை ஒன்றிய கழக செயலாளர் தென்கொண்டார் இருப்பு செ.காத்தையன் சடை யார் கோயில் கோவிந்தராஜ் அவர் களின் தாயார் முத்துலட்சுமி, நெடுவாக் கோட்டை முருகையன் அவர்களின் வாழ்விணையர் பாக்கியம், மாவட்ட ப.க துணை தலைவர் அருள்மொழி, பேட்டை கண்ணனின் தாயார் அல்லியம் மாள், ஆவடி மாவட்ட செயலாளர் சித்திரக்குடி இளவரசன் தாயார் காமு அம்மாள், அகரப்பேட்டை கழகத் தோழர் ஜெயச்சந்திரன், ஒரத்தநாடு திருவள்ளுவர் நகர் ஆசிரியர் வீராச்சாமி வாழ்விணையர் அன்னக்கிளி, சடையார் கோயில் மணிவண்ணன் ஆகியோர் மறைவிற்கு கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும் வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது எனவும், நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர்கழக இளைஞர் அணி திராவிட மாணவர் கழகம் சார்பில் தமிழ்நாட்டின் அய்ந்து முனைகளில் ஜூலை 11 தொடங்கி ஜூலை 15 சேலத்தில் சங்க மிக்கும் இருசக்கர வாகன பரப்புரை பயணம் மேற்கொண்டு வருகை தரும் வரும் இரண்டாவது குழு 14.07.2024 ஞாயிறு அன்று தஞ்சாவூர் மாவட்டம் ஒக்கநாடுகீழையூர், ஒரத்தநாடு, மேலஉளூர் தஞ்சாவூர், கண்டியூர் திருவையாறு ஆகிய ஊர்களில் உரையாற்ற உள்ளார்கள்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அணிகளின் பொறுப்பாளர்கள் தோழர்கள் அனைவரும் பெருந்திரளாக நமது மாவட்ட எல்லையான காவரா பட்டில் வரவேற்று திருவையாறு வரை உடன் சென்று வழி அனுப்புவது எனவும், அனைத்து இடங்களில் பரப்புரை கூட்டங்களை மிக எழுச்சியுடன் நடத்துவது எனவும், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு குடிஅரசு நூற்றாண்டு விழா மற்றும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தஞ்சை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கழகப் பொதுக்கூட்டங்களை நடத்துவது எனவும், தஞ்சை மாவட்டத்தில் இளைஞர் அணி, மாணவர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் மகளிர் அணி அமைப்புகளை வலுப்படுத்தும் வகையில் மாவட்டம் முழுவதும் உள்ள கிளைக் கழகங்களில் புதிய உறுப்பினர்களை இயக்கத்தின் பால் ஈர்க்கும் வகையில் கலந்துரையாடல் கூட்டங்களை நடத்தி கழக அமைப்புகளை புதுப்பிப்பது என முடிவு செய்யப்படுகிறது.
மறுமண இணையருக்கு
பாராட்டு
அண்மையில் மறுமணம் செய்து கொண்ட பூதலூர் ஒன்றிய கழக தலைவர் அல்லூர் இரா.பாலு-பொன்னி ஆகியோருக்கு மாநில ஒருங் கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார்- கலைச்செல்வி அமர்சிங் ஆகியோர் பயனாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.
No comments:
Post a Comment