கீவ், ஜூலை 11- 2 நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு அதிபர் புதினை சந்தித்து பேசினார். அப்போது இருவரும் தங்கள் நட்பை வெளிப்படுத்தும் விதமாக ஒருவரையொருவர் கட்டியணைத்துக்கொண்டனர். இது தொடர்பான படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.
இந்த நிலையில் மோடி-புதினின் இந்த சந்திப்பை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:-
உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 37 பேர் உயிரிழந்தனர். அதில் 3 சிறுவர்கள். 170 பேர் காயமடைந்துள்ளனர். உக்ரைனில் அமைந்துள்ள மிகப்பெரிய குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது. இளம் புற்றுநோயாளிகள்தான் அவர்களது இலக்கு. பலர் அதன் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர் ஒருவர் (மோடி) உலகின் மிகக் கொடூரமான குற்றவாளியை (புதின்) கட்டிப்பிடித்ததைப் பார்ப்பது அமைதி முயற்சிகளுக்கு பெரும் ஏமாற்றம் மற்றும் பேரழிவுதரும் அடியாகும். – இவ்வாறு ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
Thursday, July 11, 2024
மோடி மீது உக்ரைன் அதிபர் கடும் குற்றச்சாட்டு!
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment