கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 13, 2024

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

13.7.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரின் முன்னேற்றத்தில் தமிழ்நாடு அரசு முன்னணியில் உள்ளது. தரவுகளின் அடிப்படையில் செய்தி.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* நீட் தேர்வு மோசடியில் பாட்னா காவல்துறையால் கைது செய்யப்பட்ட 13 பேரையும் சி.பி.அய். கட்டுப்பாட்டில் விசாரணைக்கு அழைத்துச் செல்ல நீதிமன்றம் ஒப்புதல்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நீண்ட காலம் நீடிக்காது, விளையாட்டு (‘கேலா’) தொடங்கிவிட்டது என மும்பையில் மம்தா தெரிவித்துள்ளார்.
தி இந்து:
* பண மோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் கைது செய்யும் அதிகாரத்தை அமலாக்க இயக்குநரகம் அதிகாரிகள் விருப்பத்தின் பேரில் பயன்படுத்த முடியாது என்று அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்த வழக்கில், உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.
தி டெலிகிராப்:
* டில்லி பல்கலைக்கழகம் எல்.எல்.பி. மாணவர்களுக்கு மனுஸ்மிருதியை அறிமுகப்படுத்தும் திட்டம். துணைவேந்தர் நிராகரிப்பு. இந்திய அறிவைப் போதிக்க இன்னும் பல நூல்கள் உள்ளன என கருத்து.
* ராகுல் காந்தி, அமெரிக்க துணைத் தலைவர் கமலா ஹாரிஸ் ஆகியோர் தொலைபேசியில் பேசினர். உரையாடலின் நோக்கம் தெரியவில்லை என்றாலும், இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இது முக்கியமாக கருதப்படுகிறது.

– குடந்தை கருணா

No comments:

Post a Comment