கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 9, 2024

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

9.7.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* நீட் வினாத்தாள் கசிவு நடைபெற்றுள்ளது. மறுதேர்வு தேவைப்படலாம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து.
* மணிப்பூரில் எதுவும் மாறவில்லை; பிரதமர் மணிப்பூர் மக்களை சந்திக்க வேண்டும் என மணிப்பூரில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேட்டி
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
* ஒன்றிய அரசின் புதிய கிரிமினல் சட்டங்கள் குறித்து ஆராய்ந்து ஒரு மாதத்தில் அறிக்கை அளித்திட ஓய்வு பெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையிலான குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது.
* சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி – ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக் கொடுப் போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை பெருகர காவல் ஆணையர் அருண் எச்சரிக்கை
டைம்ஸ் ஆப் இந்தியா:
* ஹத்ராஸில் ஏற்பட்ட நெரிசலில் 121 பேர் இறந்ததற்கு போலே பாபா காரணம் என நேரில் பார்த்தவர்கள் குற்றச்சாட்டு
தி இந்து:
* ஜம்மு காஷ்மீரில் அதிர்ச்சி.. ராணுவத்தினர் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்! 4 வீரர்கள் பலி. ஜம்மு காஷ்மீர் பேரழிவுக்கு மோடி அரசுதான் காரணம், மல்லிகார்ஜூனா கார்கே கண்டனம்.
தி டெலிகிராப்:
* தேசிய தேர்வு முகமை செயல்பாடு குறித்து அய்டி மற்றும் கல்வி அமைச்சக அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சகம் ஆய்வு.
– குடந்தை கருணா

No comments:

Post a Comment