வெண்மலர் வரதராஜன் மறைவு தமிழர் தலைவர் இரங்கல் - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 8, 2024

வெண்மலர் வரதராஜன் மறைவு தமிழர் தலைவர் இரங்கல்

21-10

பெங்களூரு கழகத் தோழர் வெண்மலர் வரதராஜன் (வயது-65) நேற்று (7-7-2024) மதியம் 2 மணி அளவில் பெங்களூரு மருத்துவமனையில் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம்.

கருநாடக மாநில அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற வர், முதுபெரும் பெரியாரிய குடும்பத்திலிருந்து வந்தவர். தனது பதின்பருவ காலம் தொட்டே தந்தை பெரியாரின் பணி முடிக்க கழகத்திற்கு தனது பங்களிப்பை வழங்கி வந்தார். நாம் பெங்களூரு செல்லும்போதெல்லாம் தவறாமல் ரயில் நிலையத்திற்கு வந்து வரவேற்க முதல் வரிசையில் நிற்பவர். இயக்க நிகழ்ச்சிகளில் இடைவிடாது கலந்து கொண்டு தொண்டாற்றி வந்தவர். குடும்பத்தில் தன்னுடைய சகோதரிகளையும் படிக்கவைத்து ஆசிரியர்களாக்கியவர். மேலும் தனது குடும்பம் முழுவதையும் பகுத்தறிவுக் குடும்பமாக்கியவர். சொந்தமாக ஒரு பள்ளிக்கூடம் துவக்கி நடத்தி வந்தவர்.

நம்மீது எப்போதும் அன்பைப் பொழியக்கூடிய தோழர் வெண்மலர் வரதராஜன் மறைவால் துயருறும் அவர்தம் வாழ்விணையர் வரதராஜன், குடும்பத்தினர், தோழர்கள் அனைவருக்கும் இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

சென்னை (கி.வீரமணி)
8.7.2024 தலைவர், திராவிடர் கழகம்
தொடர்புக்கு: பவானி, அலைப்பேசி எண். 9036215520.

No comments:

Post a Comment