கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 8.7.2024 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 8, 2024

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 8.7.2024

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* போலி வீடியோக்களை கட்டுப்படுத்துகிறோம் என்ற பெயரில் டிஜிட்டல் இந்தியா மசோதாவை வரும் நாடாளுமன்ற கூட்டத்தில் நிறைவேற்ற மோடி அரசு திட்டம்.
* நீட் முறைகேடு தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
* ரயில் ஓட்டுநர்கள் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் எழுப்புவேன், ராகுல் உறுதி
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மணிப்பூர் செல்கிறார் ராகுல். ஜிரிபாம் நிவாரண முகாம்களில் உள்ள இடம் பெயர்ந்தவர்களுடன் கலந்து ரையாடுகிறார்.
தி இந்து:
* 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டத்தை இந்தியா எதிர்கொள்கிறது. சிட்டி குரூப் ஆய்வு அறிக்கையை மேற்கோள் காட்டி காங்கிரஸ் கண்டனம்.
தி டெலிகிராப்:
* நாடாளுமன்றத்தில் பிரதமர் உரையின் போது பாஜக உறுப்பினர்களிடமிருந்து எந்த உற்சாகமும் இல்லை, ‘மோடி மேஜிக்’ குறைந்து வருவதாகத் தெரிகிறது என் கிறது தலையங்க செய்தி.
* தாழ்த்தப்பட்ட ஜாதிகள், பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் மற்ற வர்களை விட வேலை நேரத்தில் அதிக வெப்பத்தை எதிர்கொள்கின்றனர் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
* நீட் தேர்வை தொடர்ந்து, ஒன்றிய ஆசிரியர் தகுதித் தேர்விலும் ஆள்மாறாட்டம். தர்பங்கா மாவட்டத்தில் உள்ள பல்வேறு தேர்வு மய்யங்களில், ஒன்றிய ஆசிரியர் தகுதித் தேர்வு (CTET) – 2024இல் பங்கேற்று, மற்ற தேர்வர்களின் சார்பில் தேர்வு எழுதியதற்காக, இரண்டு பெண்கள் உட்பட 12 பேரை, பீகார் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

– குடந்தை கருணா

No comments:

Post a Comment