கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 7.7.2024 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 7, 2024

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 7.7.2024

featured image

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* நாடாளுமன்றம் 22ஆம் தேதி கூடுகிறது. ஜூலை 23இல் ஒன்றிய பட்ஜெட்: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* பி.ஆர்.எஸ். கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்த கேசவ ராவ், எம்.பி., தெலங்கானா அரசின் ஆலோசகராக நியமனம்.

* நீட் தேர்வு; தொடரும் குழப்பம். மருத்துவ கலந்தாய்வு கூட்டம் வேறு தேதிக்கு மாற்றப்பட்டதால் மாணவர்கள் மன உளைச்சல்.

*பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் வெல்லும் என நாடாளுமன்ற மக்களவையில் ராகுல் சபதம் நிறைவேற 2027இல் குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கு இப்போதே காங்கிரஸ் தயாரகிறது. ராகுலின் தொடர்ச்சியான கூட்டங்கள் ஏற்பாடு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:
*மோடி ராஜ்யத்தின் சாவிகள் தெலுங்கு தேசம் (16 எம்.பி.க்கள்) மற்றும் அய்க்கிய ஜனதா தளம் (12 எம்.பி.க்கள்) கைகளில் உள்ளது. இருவரும் தங்கள் நேரத்தை ஒதுக்குவார்கள். இருவரும் பட்ஜெட்டுக்காக காத்திருக்கிறார்கள். ஆனால் மோடி தங்களுக்கு வழங்க மாட்டார் என்று தெரிந்தும் சிறப்பு பிரிவு தகுதிக்கான கோரிக்கையை இருவரும் தொடர்ந்து வைத்திருப்பார்கள்.

* ராகுல் காந்தி நாளை (8.7.2024) மணிப்பூர் செல்கிறார், மக்களவைத் தேர்தலுக்கு பிறகு மணிப்பூர் மாநிலத்திற்கு எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியின் முதல் வருகை இதுவாகும்,

* மேனாள் துணை குடியரசுத் தலைவர், மாநிலங்களவைத் தலைவர் ஹமீத் அன்சாரி பற்றி அவதூறாக பிரதமர் மோடி மக்களவை உரையில் வெளிப்படையாக பேசியதன் மூலம், அனைத்து நாடாளுமன்ற விதிமுறைகளையும் உடைத்துவிட்டார் என காங்கிரஸ் குற்றச்சாட்டு.

தி டெலிகிராப்:

* இந்தியாவின் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு பின்னால் உள்ள முக்கியக் காரணம், கல்வி மற்றும் சுகாதாரத் துறையில் புறக்கணிக்கப்படுவதே ஆகும் – என நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் பேட்டி.

* இந்திய விண்வெளி ஆராய்ச்சி மய்யத்தின் (இஸ்ரோ) விஞ்ஞானிகள் ஆதாம் பாலத்தின் மிக விரிவான வரைபடத்தை உருவாக்கியுள்ளனர். கடலுக்கு அடியில் தனுஷ்கோடியிலிருந்து இலங்கையில் தலைமன்னார் வரை “தொடர்ச்சியாக” நீரில் மூழ்கிய மேடு என்பதை உறுதிப்படுத்துகிறது.

– குடந்தை கருணா

No comments:

Post a Comment