ஜபல்பூர், ஜூலை13– மத்தியப்பிரதேசத்தில் மாணவர்களிடம் சட்ட விரோதமாக வசூலித்த சுமார் ரூ.65 கோடியை திருப்பித்தருமாறு 10 பள்ளிகளுக்கு மாவட்ட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மத்தியப்பிரதேசத்தில், தனியார் பள்ளிகள் கட் டணம் தொடர்பாக விதிமுறைகள் வகுக்கப் பட்டுள்ளன. அதன் படி, 10 சதவீதத்துக்கு மேல் கட்டணத்தை உயர்த்த விரும் பினால், மாவட்ட நிர்வாகத் திடமும், 15 சதவீதத்துக்கு மேல் கட்டணத்தை உயர்த்த விரும்பினால், மாநில அரசு அமைத்த குழு விடமும் ஒப்பு தல் பெற வேண்டும்.
ஆனால், அம்மாநிலத் தில் உள்ள ஜபல்பூர் மாவட்டத்தில் சில தனியார் பள்ளிகள் உரிய ஒப்புதல் பெறாமல் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்து இருப்பதாக புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில், பள்ளி நிர்வாகிகள் மீது ஜபல்பூர் மாவட்ட நிர்வாகம் காவல்துறையில் புகார் அளித்தது.
மேலும், மாவட்ட அளவிலான குழு, அந்த பள்ளிகளின் கண்க்குகளை ஆய்வு செய்தது. அதில், 10 பள்ளிகள், மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
உரிய அனுமதியின்றி, சட்ட விரோதமாக வசூலிக்கப்பட்ட அக் கட்டணத்தை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்தது.
2018-2019 கல்வி ஆண்டில் இருந்து 2024-2025 கல்வி ஆண்டுவரை 81 ஆயிரத்து 117 மாணவர்களிடம் மொத்தம் ரூ.64 கோடியே 58 லட்சம் கூடுதல் கட்டணம் வசூலித்து உள்ளனர்.
அந்த தொகையை சம்பந்தப்பட்ட மாணவர் களிடம் திருப்பித் தருமாறு அப்பள்ளிகளுக்கு அறிவிக்கை அனுப்பி இருப்பதாக மாவட்ட கல்வி அதிகாரி கன்ஷ்யாம் சோனி தெரிவித்தார்.
No comments:
Post a Comment