அலிகர், ஜூலை 11 ஹாத்ரஸ் கொடூர சாவுகள் தொடர்பான விவகாரத்தில் துணை ஆட்சியர், நிர்வாக அதிகாரி, காவல்துறை கண்காணிப்பாளர் உள்பட 7 பேர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், இன்றுவரை தலைமறைவாக உள்ள சாமியார் மீது முதல் தகவல் அறிக்கைக்கூட பதிவு செய்யவில்லை
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டம், புல்ராய் கிராமத்தில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் கடந்த 2-ஆம் தேதி நடைபெற்ற சாமியார்‘போலே பாபா’ என்பவனின் காலடி மண்ணை பிரசாதமாக எடுக்கச் சொல்லிய போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 121 போ் உயிரிழந்தனா்.
இந்த நிலையில், ஹாத்ரஸில் கூட்ட நெரிசலில் சிக்கி 121 போ் உயிரிழந்த நிகழ்வில் சிறப்பு விசாரணைக் குழு உத்தரப்பிரதேச மாநில அரசிடம் விசாரணை அறிக்கையை 9.7.2024 அன்று அளித்துள்ளது. விசாரணை அறிக்கையின்படி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் செய்த தவறே கூட்ட நெரிசல் ஏற்பட முக்கிய காரணமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 2 லட்சம் பேர் திரண்டிருந்த நிகழ்ச்சிக்கு, 80,000 பேர் மட்டுமே பங்கேற்கப் போவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அனுமதி பெற்றிருந்ததும், அதற்கான அனுமதியை அதிகாரிகள் வழங்கியிருப்பதும் இந்த விபத்துக்கான முக்கிய காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்த துயரத்துக்குக் காரணமான அதிகாரிகள் மீது உத்தரப்பிரதேச அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. துணை ஆட்சியர் சிக்கந்தர் ராவ் உள்பட 7 அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment