10.7.1937 மாயாவரம் சி.நடராஜன் நினைவு நாள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 10, 2024

10.7.1937 மாயாவரம் சி.நடராஜன் நினைவு நாள்

featured image

தந்தை பெரியார் காங்சிர சில் இருந்த காலம் முதல் சுயமரியாதை இயக்கம் கண்ட காலம் அளவும் அவரோடு துணை நின்று பொதுப்பணியில், சுயமரியாதை இயக்கப் பணிகளில் தீவிரமாகத் தொண்டாற்றியவர் மாயவரம் சி.நடராசன். தந்தை பெரியாரின் மெய்க் காவலர் என்று போற்றப்பட்டவர்!

இவர் மாயவரத்தில் 7.1.1902 இல் ந.சிதம்பரநாதன் – மங்கையர்க்கரசி இணையருக்குப் பிறந்தார். ‘‘காங்கிரஸ், ஜஸ்டிஸ், சுயமரியாதை உலகில் நடராசனை அறியாதவர் வெகு சிலரே இருக்கலாம். சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்த காலம் முதல் கடைசி வரை அருந்தொண்டாற்றி வந்தவர். தமக்கென வாழாதவர். தமக்கென எந்த ஓர் எண்ணத்தையும் காட்டிக்கொள்ளாத போர் வீரராய் இருந்தவர்!

தந்தை பெரியார் மலாயா சுற்றுப் பயணத்திற்காக 15.12.1929இல் நாகையில் கப்பலேறினார். அவருடன் நாகம்மையார், எஸ்.இராமனாதன், அ.பொன்னம் பலனார், சாமி. சிதம்பரனார், மாயவரம் சி.நடராசன் ஆகியோர் சென்றனர். 20.12.1929 அன்று பினாங்கு துறைமுகத்தில் பெரியார் அவர்கள் இறங்கிய போது 50,000க்கும் மேற்பட்ட மக்கள் வரவேற்றனர். தந்தை பெரியாரோடு தொடர்ந்து பயணம் செய்தார். இவர் 10.7.1937இல் மறைந்தார்
மாயவரம் சி நடராசன் மறைவு குறித்து குடிஅரசில் தந்தை பெரியார் இவ்வாறு எழுதினார்.

பணங்காசைப் பற்றியோ; தண்டனை, அச்சுறுத்தல் பற்றியோ, துன்பம், தொல்லை ஆகியவை பற்றியோ சிறிதும் கவலை கொள்ளாமல், தலைவரால் என்ன உத்தரவு பிறப்பிக்கப்படுகிறதோ அதற்கு இசையவே படையை நடத்திய தளபதி திடீரென்று முடிவு எய்திவிட்டார் என்று தந்தி வந்தது! நம்ப முடியவில்லை,

எழுதுவதற்குப் பேனா ஓடவில்லை. ‘குடிஅரசு’ வீரவணக்கம் செலுத்தி அந்தத் தளபதியை நினைவு கூர்வோமாக’’ என தந்தை பெரியார் தலையங்கமாக எழுதி இருந்தார்.

No comments:

Post a Comment