டெக்சாஸ், ஜூலை 9- வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 37 ஆவது ஆண்டு தமிழ் விழா அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் சான் ஆண்டனியோ நகரில் நடைபெற்றது.
இவ்விழாவில் கலைஞர் அறக் கட்டளை – அமெரிக்கா சார்பில் தமிழினத் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு மற்றும் 101ஆவது பிறந்த நாள் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் பல்வேறு ஆளுமைகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவின் இணை அமர்வில் “காலத்தை வென்ற தலைவர் கலைஞர்” என்னும் தலைப்பில் சிறப்பு கலந்து ரையாடல் நடைபெற்றது.
கலைஞர் அறக்கட்டளையின் இயக்குநர் நியுசெர்சி பாலா அவர்கள் ஒருங்கிணைத்த இந்த நிகழ்வை மூத்த ஊடகவியலாளர் தமிழ்க் கேள்வி செந்தில் வேல் அவர்கள் தொகுத்து வழங்கினார். இதில் திட்டக்குழுவின் துணைத் தலைவர் முனைவர் ஜெயரஞ்சன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளூர் ஷாநவாஸ், வேல்முருகன், மேனாள் அய்.ஏ.எஸ். அதிகாரிகள் பாலகிருஷ்ணன், பாலச்சந்திரன், கவிஞர் அறிவுமதி, வெளிநாடு வாழ் தமிழர்கள் நலவாரிய தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி, பெரியார் பன்னாட்டமைப்பின் தலைவர் டாக்டர் சோம. இளங்கோவன், வடஅமெரிக்கத் தமிழ் சங்கத் தலைவர் பாலா சுவாமிநாதன், மேனாள் தலைவர் கால்டுவெல் வேள்நம்பி, வெளிநாடுவாழ் தமிழர் நல வாரிய உறுப்பினர் லண்டன் பைசல், Microsoft செசில் சுந்தர், இந்திய அயலக காங்கிரஸ் பொதுசெயலாளர் ஷான் சன்முகம் உள்ளிட்ட ஆளுமைகள் கலந்து கொண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சாதனைகளை எடுத்துரைத்தனர். நிகழ்வின் தொடக்க மாக டாலஸ் பாண்டி வரவேற்புரை ஆற்றினார். நிறைவாக சிகாகோ விஜய் சாந்தலிங்கம் நன்றியுரை கூறினார்.
இதில் கலைஞர் அறக்கட்டளை- அமெரிக்கா அமைப்பை சேர்ந்த வாசிங்டன் சிவா, விஸ்கான்சின் சிவா, கோபி கதிர்வேல், யூட்டா கார்த்திக், பேஏரியா கார்த்திக், டாலஸ் செல்வா, புளோரிடா கோபி,பிரிட்டோ ஜான்,டாலஸ் சுப்பு, டாலஸ் சக்தி, விஷ்ணு, சியாட்டல் பிரேம், டாக்டர் சரோஜா அம்மாள், இலங்கை தமிழர் கனடா சுபாஷ் ஆகியோர் நிகழ்வில் பங்கேற்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திட்டங்களால் தங்கள் வாழ்வில் அடைந்த முன்னேற்றங்களை எடுத்துக்கூறி விழாவை சிறப்பித்தனர். இதில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான தமிழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment