தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் வழங்கல் - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 8, 2024

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் வழங்கல்

3-17

கந்தர்வகோட்டை சூன் 8- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை ஒன்றியம் குளத்தூர் நாயக்கர் பட்டியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு அறி வியல் இயக்க கிளை தலைவர் திவ்யா அனைவரையும் வரவேற்றார்.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கந்தர்வக்கோட்டை வட்டார செயலாளர் ரஹ்மத்துல்லா மரக்கன்றுகளை வழங்கி உலக சுற்றுச்சூழல் தினம் குறித்து பேசியதாவது:
உலக சுற்றுச்சூழல் தினம் 1972 ஆம் ஆண்டில், ஐநா பொதுச் சபை ஜூன் 5 ஆம் தேதியை உலக சுற்றுச்சூழல் தினமாக அறிவிக்கப்பட்டது. ஒரே பூமி என்ற முழக்கத்தின் கீழ் முதல் கொண்டாட்டம் 1973 இல் நடந்தது. அடுத்த ஆண்டுகளில், காற்று மாசுபாடு, பிளாஸ்டிக் மாசுபாடு, கடல் மட்ட அதிகரிப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பு போன்ற நமது சுற்றுச்சூழலை எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு தளமாக உருவாக்கப்பட்டுள்ளது.

உலக சுற்றுச்சூழல் தினத்தின் 2024 கருப்பொருள் எங்கள் நிலம் என்ற முழக்கத்தின் கீழ் நில மறுசீரமைப்பு, பாலைவனமாக்கல் மற்றும் வறட்சியைத் தாங்கும் தன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்தும். நமது எதிர்காலம். நாங்கள் தலைமுறை மறுசீரமைப்பு இந்த ஆண்டு பாலை வனமாக்கலை எதிர்த்துப் போராடுவதற்கான ஐநா மாநாட்டின் 30வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது என்று பேசினார்.
இந்நிகழ்வில் அறிவியல் இயக்க உறுப்பினர்கள் சுதா, வாசுகி, பானுப்பிரியா, சிந்துஜா, கெளசல்யா, அனுசுயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment