உத்தரப்பிரதேசம், மணிப்பூரில் நிலநடுக்கம் - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 3, 2024

உத்தரப்பிரதேசம், மணிப்பூரில் நிலநடுக்கம்

கோரக்பூர் ஜூன் 03 உத்தரப் பிரதேசம் மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் நேற்று (2.6.2024) மாலை 3.49 மணியளவில் லேசான நிலக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆகப் பதிவாகியுள்ளது என்று தேசிய புவியியல் ஆய்வு மய்யம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது. தேசிய புவியியல் ஆய்வு மய்ய அறிக்கையின் படி, நேற்று மாலை சுமார் 3.49 மணியளவில் சோன்பத்ரா மாவட்டத்தில் நிலக்கம் ஏற்பட்டது.

மணிப்பூர் மாநிலம் சண்டல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2:28 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆகப் பதிவானது என்று தேசிய புவியியல் ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment