சென்னை, ஜூன் 13– தமிழ்நாட்டில் போதைப் பொருள்கள் புழக்கத்தை முற்றிலும் ஒழிக்க பெரும் இயக்கம் தொடங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அறிவித்தார் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த ஆட்சியா்களுடன் தலைமைச் செயலகத்தில் 11.6.2024 அன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
எதிர்வரும் நாள்களில் பல திட்டங்களை அறிமுகம் செய்ய இருக்கிறோம். புதுமைப் பெண் திட்டம் போன்று, மாணவா்களுக்கு ரூ.1,000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டமும் தொடங்கப்பட இருக்கிறது. இதுபோன்ற திட்டங்கள்தான், தமிழ்நாட்டின் இளைய சக்தி வளா்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும் திட்டங்களாகும். இந்தத் திட்டங்களைத் திறம்படச் செயல்படுத்துவதில் மாவட்ட ஆட்சியா்கள் கவனம் செலுத்த வேண்டும்.
அடுத்த 2 ஆண்டுகள்: அடுத்த இரண்டு ஆண்டுகள் தமிழ்நாட்டின் வளா்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் மிக முக்கியமான ஆண்டுகளாகும்.
புதிய உத்வேகத்துடன் மக்கள் நலப் பணிகளை சிறப்பாகச் செய்ய வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. ஒரு சிறந்த நல்லாட்சியை வழங்க நான்கு முக்கியக் கூறுகளில் கவனம் செலுத்த வேண்டியது மிக வும் முக்கியம். சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு, சிறந்த சமூகநலத் திட்டங்களைச் செயல்படுத்துதல், கட்டமைப்பு வசதி களை மேம்படுத்தி வேலைவாய்ப் புகளை உருவாக்குதல், பொது மக்களுக்குத் தடையின்றி எளிதாக அரசு சேவைகள் கிடைப்பதை உறுதி செய்வது ஆகிய அம்சங்கள்தான் நல்லாட் சியின் இலக்கணங்களாகும். அத்தகைய நல்லாட்சி யைத்தான் நாம் வழங்கி வருகிறோம். எண்ணற்ற திட்டங்கள் மூலமாக, இதை மக்களின் அரசாக அவா்களை எண்ண வைத்துள்ளோம்.இந்த எண்ணம் அவா்களிடம் தொடர வரும் ஆண்டுகளிலும் தொய் வில்லாமல் பணியாற்றுவோம். வருவாய்த் துறைப் பணிகள்: மக்களுடன் நெருக்கமாக இருக்கக்கூடிய துறைகளில் ஒன்று வருவாய்த் துறை. அந்தத் துறையின் திட்டங்கள் மக்களிடம் உரிய முறையில் சென்று சேர வேண்டும்.
‘மக்களுடன் முதலமைச் சர்’ திட்டத்தை வரும் ஜூலை 15 முதல் செப். 15ஆம் தேதி வரை ஊரகப் பகுதிகளில் செயல்படுத்த முடிவு எடுத்துள்ளோம்.
‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’, ‘நீங்கள் நலமா?’ போன்ற திட்டங்களும் நடைமுறைப்பட உள்ளன. வருவாய்த் துறையில் பட்டா மாறுதல், சான்றிதழ்களைப் பெறுவதில் பொதுமக்கள் அடையும் சிரமங்கள் ஆகி யன அரசின் கவனத்துக்கு வந்துள்ளன. இந்த விஷயத்தில் மாவட்ட ஆட்சியா்கள் அனைவரும் தனிக் கவனம் செலுத்த வேண்டும். கலைஞா் கனவு இல்லம், இரண்டரை லட்சம் தொகுப்பு வீடுகளைப் புனரமைக்கும் திட்டம் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தி விரைந்து முடிக்க வேண்டும். கல்லூரிக் கனவு, காலை உணவுத் திட்டம் போன்ற கல்வித் துறை சார்ந்த திட்டங்களையும் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்.
போதைப் பொருள்கள் ஒழிப்பு: ஒவ்வொரு மாவட் டத்திலும் நடைபெற்றுவரும் அடிப்படை கட்டமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பருவமழைக் காலங்களால் அதில் தாமதம் ஏற்படக்கூடும். இதைக் கருத்தில்கொண்டு குறுகிய காலத்துக்குள் திட்டப் பணிகளை நல்ல தரத்துடன் விரைந்து முடிக்க வேண்டும்.தமிழ்நாட்டில் போதைப் பொருள்கள் புழக்கத்தை பெருமளவில் கட்டுப்படுத்தி இருக்கிறோம்.
அது போதாது; போதைப் பொருள்கள் புழக்கம் என்பது, சட்டம்-ஒழுங்கு பிரச்சினை மட்டுமல்ல, சமூக ஒழுங்குப் பிரச்னையாகும். எனவே, தமிழ்நாட்டில் போதைப் பொருள்கள் புழக்கத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும். இதற்காக பெரும் இயக் கத்தை நாம் தொடங்க இருக்கிறோம். காவல் துறை உள்பட அனைத்துத் துறை அலுவலா்களையும் ஒருங்கிணைத்து போதைப் பொருள்கள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுப்பதுடன், அதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
போதைப் பொருள்களின் புழக்கம் அறவே இல்லை; முற்றுப்புள்ளி வைத்து விட்டோம் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்றார் அவா்.
இந்த ஆலோசனையில் தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா், திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, வேலூா், கடலூா், தஞ்சா வூா், மயிலாடுதுறை, நாகை, திருவாரூா் ஆகிய மாவட்டங்களின் ஆட்சியா்கள் நேரில் பங் கேற்றனா். தோ்தல் பணி – ஆட்சியா்களுக்கு முதலமைச்சர் பாராட்டு:
தோ்தல் பணிகளை சிறப்பாக கையாண்டதாக ஆட்சியா்களுக்கு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்தார்
இது குறித்து அவா் பேசியதாவது: தோ்தல் பணிகளை மிகச் சிறப் பாகக் கையாண்ட அனைவருக்கும் எனது பாராட்டுகள், வாழ்த்துகள். மிகக் கடுமையான கோடை காலத்தில் குடிநீா் பிரச்சினை, மின்வெட்டு ஆகியன ஏற்படாமல் கவனமாக கையாண்டதற்கு நன்றி.
அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களிடமும் சென்று சோ்ந்து வருகிறது. இதைக் கண்காணித்த ஆட்சியா்களுக்கும், அரசு அதிகாரிகள், அலுவலா் களுக்கும் நன்றி என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
No comments:
Post a Comment