சென்னை, ஜூன் 14- மாஸ்கோ நகர சுற்றுலாக் குழு, இந்தியாவில் இருந்து கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்காக ஏற்பாடு செய்யும் வணிக ரீதியிலான சுற்றுலாப் பயணி களின் எண்ணிக்கையை அதி கரிக்கச் செய்யும் நோக்கில் புதிய பயிற்சித் திட்டத்தை அறி முகப்படுத்தியுள்ளது.
மாஸ்கோவிற்கும் இந்தியா விற்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தவும், மைஸ் என்னும் கூட்டங்கள், ஊக்கத்தொகைகள், மாநாடுகள், கண்காட்சிகள் ஆகிய கார்ப்பரேட் நிகழ்வுகளுக்கான முதன்மை சுற்றுலா நகரமாக ரஷ்யத் தலைநகரை முன்னிறுத் தவும் மாஸ்கோ ‘மைஸ்’ தூதர்கள் என்னும் புதிய சான்றிதழ் படிப்பினை இணையவழியில் அறி முகப்படுத்தியுள்ளது. சுற்றுலாத் துறையில் ஆர்வம் உள்ளோர் மற்றும் பணியாற்றுவோர் இத னைக் கற்கலாம்.
ஜூன் 3 முதல் நவம்பர் 1, 2024 வரை திட்டமிடப்பட்டுள்ள இந்த இணையவழி சான்றிதழ் படிப்புத் திட்டம், பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் பெரும் மாற் றத்தை ஏற்படுத்தும் அனுபவமாக இருக்கும். இந்தியாவின் ‘மைஸ்’ தொழில் பிரிவு சார்ந்த பிரதிநிதிகள் RUSSPASS தளம் மூலம் திட்டத்திற்கு பதிவு செய்துகொள்ளலாம்.
இது குறித்து மாஸ்கோ நகர சுற்றுலாத் துறையின் தலைவர் எவ்ஜெனி கோஸ்லோவ் கூறுகையில்,
“மாஸ்கோ ‘மைஸ்’ தூதர்கள் திட்டம் இந்தியாவை மையமாகக் கொண்டுள்ளது, ஏனெனில் அது எங்கள் முன்னுரிமையான பகுதி. இந்தியாவில் இருந்து மாஸ்கோவிற்கு வணிகப் பயணிகளின் வருகையை அதி கரிப்பதைத் தாண்டி எங்கள் நோக்கம் பெரிது. நாங்கள் வழங்கும் சேவைகளின் தரத்தை உயர்த்துவதையும், எங்கள் திறன்களை திறம்பட்ட வகையில் வெளிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment