கீழப்பாவூர், ஜூன் 14- தென்காசி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 11-06-2024 அன்று மாலை 6 மணி அளவில் தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் பெரிய திடலில் நடைபெற்றது.
பொதுக்குழு உறுப்பினர் பொன்ராஜ் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாவட்ட கழக காப்பாளர் சி.டேவிட் செல்லத்துரை தலைமையேற்று உரையாற்றினார். மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. குணசேகரன் கூட்டத்தின் நோக்கம் குறித்து உரையாற்றினார்.
பொதுக்குழு உறுப்பினர் அய். இராமச்சந்திரன், மாவட்ட துணைத் தலைவர் செந்தில்வேலன், ஆலங்குளம் நகரத் தலைவர் பெரியார் குமார், கீழப்பாவூர் அன்பழகன், வடகரை நகர தலைவர் சண்முகம், மாநில இளை ஞரணி துணைச்செயலாளர் அ.சவுந்தரபாண்டியன், மாநில பகுத்தறிவாளர் கழக துணை தலைவர் கே. டி.சி.குருசாமி தலைமைக் கழக அமைப்பாளர் இல.திருப்பதி, தென்காசி மாவட்ட தலைவர் வழக்குரைஞர் த.வீரன் ஆகியோர் உரையாற்றினர்.
1978ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 45 ஆவது ஆண்டாக 2024 ஜூலை 4,5,6,7 ஆகிய தேதிகளில் குற்றாலத்தில் நடைபெறும் பெரியாரியல் பயிற்சி பட்டறையை மிக சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து நிறைவாகக கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயகுமார் உரையாற்றினார்.
மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் செங்கதிர் வள்ளுவன் நன்றி கூறினார்.
2024ஆம் சூலை 4,5,6,7 வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நான்கு நாட்கள் குற்றாலத்தில் திராவிடர் கழகம் சார்பில் நடைபெறும் பெரியாரியல் பயிற்சி பட்டறை ஏற்பாட்டுக் குழு:: மாநில கழக ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், தலைமைக் கழக அமைப்பாளர் இல.திருப்பதி.
ஏற்பாட்டுக்குழு தலைவர்: சீ.டேவிட் செல்லத்துரை (மாவட்ட காப்பாளர்)
துணைத் தலைவர்கள்: அய்.இராமச்சந்திரன் (பொதுக்குழு உறுப்பினர்), வே.முருகன் (மாவட்ட செயலாளர்)
செயலாளர்: வழக்குரைஞர் த.வீரன் (மாவட்டத் தலைவர்)
துணைச் செயலாளர்கள்: பி.பொன்ராஜ் (பொதுக்குழு உறுப்பினர்), கே.சண்முகம் (வடகரை நகர கழக தலைவர்)
பொருளாளர்: கே.டி.சி. குருசாமி (மாநில ப.க. துணைத் தலைவர்)
உறுப்பினர்கள்: ம.செந்தில்வேல் (மாவட்ட துணைத் தலைவர்), ஆலங்குளம் குமார் (ஆலங்குளம் நகர தலைவர்), அ.வ.சவுந்தரபாண்டியன் (மாநில இளைஞரணி துணை செயலாளர்), சு.இனியன் (மாநில மாணவர் கழக துணைச் செயலாளர்), சு.கோபால் (மாவட்ட இளைஞரணி செயலாளர்), சீ.செங்கதிர்வள்ளுவன் (மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர்), இல.அன்பழகன் (கீழப்பாவூர்).
45ஆவது ஆண்டு பெரியாரியல் பயிற்சி பட்டறைக்கு தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களின் சார்பில் நிதியுதவி, மற்றும் பொருள்கள் நன்கொடை ஆகியவை பெறுவதென தீர்மானிக் கப்படுகிறது.
No comments:
Post a Comment