பெரம்பலூர், ஜூன் 11- படிக்கட்டு பயணத்தை தடுக்கும் நோக்கில் அனைத்து அரசுப் பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் பொருத்தப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார். பெரம்பலூரில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் செய்தியாளர்களிடம் கூறியது:
புதிதாக இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் வரை,பழைய பேருந்து பயண அட்டைஅல்லது சீருடையில் வரும் மாணவ, மாணவிகளை கட்டணம்இன்றி பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்று அனைத்து போக்குவரத்து துறை ஊழியர்களுக்கும் உத்தர விடப்பட்டுஉள்ளது.
அரசுப் பேருந்துகளில், மாணவர்கள் உள்ளிட்ட பயணிகள், படியில் நின்று பயணிப் பதை தடுக்கும் நோக்கில், புதிய பேருந்துகளில் தானியங்கி கதவுகள்இருப்பதுபோல, பழைய அரசுப் பேருந்துகளிலும் பொருத்தப்பட்டு வருகிறது.
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மற்றும் உலக வங்கி நிதி உதவியுடன் சென்னை யில் பேருந்து நிறுத்தங்களில் பேருந்து வருவதை முன்கூட்டியே அறிவிக்கும் டிஜிட்டல் பெயர்ப் பலகைகள் நிறுவப்பட்டுள்ளன. சென்னையில் முதற்கட்டமாக ஜிபிஎஸ் கருவி பொருத்தி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் வெற்றி பெறும் பட்சத்தில் தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்.
No comments:
Post a Comment