மயிலாடுதுறை, ஜூன் 15- மயி லாடுதுறை நகர திராவிடர் கழக மேனாள் துணைச் செயலாளர் தங்க.வீரபாண்டியன் உடல் நலக் குறைவால் 2.6.2024 ஞாயிறு காலை இயற்கை எய்தியதை யொட்டி படத்திறப்பு – நினைவேந்தல் நிகழ்ச்சி 12.6.2024 காலை மாவட்டத் தலைவர் கடவாசல் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. குத்தாலம் ஒன்றியத் தலைவர் சா.முருகையன் படத்தை திறந்து வைத்தார். மாவட்டச் செயலாளர் கி.தளபதிராஜ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் தங்க.செல்வ ராஜ் அனைவரையும் வரவேற்க மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் இரெ.செல் லதுரை, வழக்குரைஞர் புகழரசன், திருக்குறள் பேரவை செயலாளர் செல்வக்குமார் ஆகியோர் உரையாற்றியதைத் தொடர்ந்து கழக மாவட்ட துணைச் செயலாளர் அரங்க.நாகரத்தினம் நன்றி கூறினார்.
மாவட்ட அமைப்பாளர் ஞான.வள்ளுவன், மயிலாடு துறை நகர தலைவர் சீனி முத்து, செயலாளர் பூ.சி.காம ராஜ், ஒன்றிய செயலாளர் அ.சாமிதுரை விவசாய அணி செயலாளர் கு.இஞ்செழியன், சீர்காழி ஒன்றிய செயலாளர் கடவாசல் செல்வம், மற்றும் கழக தோழர்கள் உறவினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment