மோடியை மாட்டி விடும் குருமூர்த்தி! - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 6, 2024

மோடியை மாட்டி விடும் குருமூர்த்தி!

கேள்வி: நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமரின் பிரச்சாரம் ஹிந்து வாக்கு வங்கியின் அவசியத்தை உணர்த்துவது பிரதானமாக உள்ளதே?
பதில்: இதுவரை சிறுபான்மையினரின் வாக்கு வங்கியின் அவசியத்தை மட்டுமே உணர்ந்திருந்த அரசியல் கட்சிகளுக்கு, ஹிந்து வாக்கு வங்கியின் அவசியத்தை உணர்த்துகிறார் மோடி. ‘துக்ளக்’, 29.5.2024, பக்கம் 58
நமது பதிலடி: ஆக, ஹிந்து வாக்கு வங்கியின் அவசியத்தை மோடி பிரச்சாரம் செய்தார் என்பதை ‘துக்ளக்’ குருமூர்த்தி ஒப்புக் கொள்கிறார்.
2017 – உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஒன்றில் தேர்தலில் மதத்தைச் சம்பந்தப்படுத்திப் பேசுவது குற்றம் என்று கூறியுள்ளது. தேர்தல் பிரச்சார மேடையில் மதத்தைப்பற்றிப் பேசி வெற்றி பெற்ற வேட்பாளர் பதவியைப் பறிக்கும் உத்தரவை ஏற்கெனவே நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
குருமூர்த்தி அய்யர் மோடியைச் சிக்கலில் மாட்டி விடுகிறார். ஆத்திரம் வந்தால் அறிவு வேலை செய்யாதல்லவா!

No comments:

Post a Comment