தமிழிசை சவுந்தரராஜன் அவர்களை ஆந்திர மாநில அமைச்சரவை பதவியேற்பு விழா மேடையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கடுமையாக கண்டித்தார் என்ற செய்தி பெரும் பிரச்சினையாக வெடித்தது.
இதனை கண்டித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் சில மாவட்டங்களில் தமிழிசையை அவமதிப்பு செய்ததற்காக நாடார் சங்கம் என்ற பெயரில் கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருக்கின்றன.
இதனை ஒரு ஜாதி பிரச்சினையாக பார்க்க வேண்டுமா?
அரசியல் நாகரிகமின்றி ஒன்றிய உள்துறை அமைச்சர் ஒரு பொது விழாவில் இப்படி நடந்து கொண்டுள்ளார் என்பது ஒரு கோணம்.
இன்னொன்று இது போன்ற பிரச்சினைகளை எந்த இடத்தில் பேசித் தீர்க்க வேண்டும்? சம்பந்தப்பட்டவர்களை அழைத்துப் பேச வேண்டும் என்ற நிலை, கூட நாகரிகம் கூட உச்ச பதவியில் இருப்பவர்களுக்குத் தெரியவில்லையா?
இதில் இன்னொரு கண்ணோட்டமும் உண்டு. தமிழிசை போன்றவர்கள் கட்சிக்காக வீதியில் இறங்கி கடுமையாக உழைத்திருக்கிறார்கள் ஆனால், சொட்டு வியர்வை சிந்தாமல், முடி கலையாமல், அலட்டிக் கொள்ளாமல், மக்களிடம் வீதி வீதியாக சென்று வாக்குகளைக் கோராமல் மாநிலங்களவை வழியாக உள்ளே புகுந்து, ஒன்றிய நிதி அமைச்சராக அலங்கரிக்கிறாரே நிர்மலா சீதாராமன். அதைப்பற்றி எல்லாம் பேச மாட்டார்களா? மனுநீதி இன்னும் கோலோச்சுகிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன எடுத்துக்காட்டு தேவை!
No comments:
Post a Comment