10.6.2024
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
*நீட் தேர்வை முதலில் எதிர்த்தது திமுக.. ஏ.கே.ராஜன் அறிக்கையை 9 மொழிகளில் வெளியிட்டார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
*3ஆவது முறையாக பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி; குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 30 கேபினட் அமைச்சர்கள், 36 இணை அமைச்சர்கள், 5 பேருக்கு தனிப்பொறுப்பு.
*கேபினட் அமைச்சராக பொறுப்பு வகித்த நிலையில் இணை அமைச்சர் பதவியை ஏற்க அஜித் பவார் கட்சியைச் சேர்ந்த பிரபுல் படேல் மறுப்பு.
*பவன் கல்யாண் தலைமையிலான ஜன சேனா கட்சி, மோடி அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு.
*இந்தியா கூட்டணி நாடாளுமன்றத்தில் ஒற்றுமை யுடன் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்டு, என்.டி.ஏ அரசுக்கு அழுத்தம் தர வேண்டும், தலையங்க செய்தி.
தி இந்து:
*உ.பி.யில் மக்களவை தேர்தலில் பாஜகவின் அநீதிக்கு எதிரான போராட்டத்தில் விளிம்புநிலை சமூகங்களை அணிதிரட்ட சமூக ஊடகங்கள், தனி நபர்கள் ஆற்றிய தொண்டுக்கு நன்றி, அகிலேஷ்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
*திமுக தேர்தல் வெற்றியை குறிக்கும் வகையில் கோவையில் ஜூன் 15ஆம் தேதி ’முப்பெரும் விழா’.
டைம்ஸ் ஆப் இந்தியா:
*மோடி அரசு பதவியேற்பு விழா: கடவுள் பெயரை தவிர்த்து அரசமைப்பு சட்டத்தின் பெயரால் 5 அமைச்சர்களும், ஆங்கிலத்தில் 18 அமைச்சர்களும் உறுதிமொழி ஏற்றனர்.
தி டெலிகிராப்:
*இனி மோடி அரசு அல்ல;, என்டிஏ அரசு: ஆர்ஜேடியின் மனோஜ் ஜா பேச்சு.
*ஒன்றிய நிதியைக் கோரி பாஜக தலைமையிலான ஒன்றிய அரசுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் குரல் எழுப்பும், மம்தா.
*மோடி பிரதமராக பதவியேற்றார், ஆனால், வாக்காளர்கள் அவரது எண்ணிக்கையின் வரம்பு மற்றும் அவரது கூட்டாளிகள் தயவால் அவரை மீண்டும் மக்களவைக்கு அனுப்பியுள்ளனர்.
– குடந்தை கருணா
Monday, June 10, 2024
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
Tags
# ஏட்டுத் திக்குகளிலிருந்து...
About Viduthalai
ஏட்டுத் திக்குகளிலிருந்து...
Labels:
ஏட்டுத் திக்குகளிலிருந்து...
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment