தேர்தலுக்குப் பிந்திய கருத்துக் கணிப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் ஆம் ஆத்மி கோரிக்கை - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 4, 2024

தேர்தலுக்குப் பிந்திய கருத்துக் கணிப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் ஆம் ஆத்மி கோரிக்கை

15-3

புதுடில்லி, ஜூன் 4– தேர்லுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளுக்கு நாடு முழுவதும் தடை விதிக்க வேண்டும் என ஆம் ஆத்மி கோரிக்கை விடுத்துள்ளது. ஆம் ஆத்மி தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்தார்.அப்போது அவர், “கருத்து கணிப்புகளுக்கு நாடு முழுவதும் தடை விதிக்க வேண்டும். அவை தவறானவை என கடந்தகால தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளன. இது நாட்டின் நிர்வாக அமைப்பு மற்றும் தேர்தல் ஆணையத்தின் மீதான செல்வாக்கை குறைக்கும் முயற்சியாகும்.

மக்கள் மனதில் தவறான எண்ணத்தை உருவாக்கும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும்” என்றார்.

No comments:

Post a Comment