ராமநாதபுரத்தில் பயன்பாட்டுக்கு வந்தது இயற்கை எரிவாயு அரசுப் பேருந்துகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 16, 2024

ராமநாதபுரத்தில் பயன்பாட்டுக்கு வந்தது இயற்கை எரிவாயு அரசுப் பேருந்துகள்

featured image

ராமநாதபுரம், ஜூன் 16- ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே கடந்த மார்ச் 6ஆம் தேதி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் கும்பகோணம் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்ப ரேஷன் லிட் இணைந்து நடத்தும் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லரை விற்பனை நிலை யத்தை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் திறந்து வைத்தார்.
அப்போது இந்த பெட்ரோல் விற்பனை நிலையத்தில் விரைவில் சிஎன்ஜி எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு நிரப்பும் வசதி துவங்கப்படும். அரசு பேருந்துகளில் சிஎன்ஜி வசதி ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதன் முன்னோட்ட மாக தமிழ்நாட்டில் முதன்முறையாக, ராம நாதபுரத்திலிருந்து பெரியபட்டினத்திற்கு இயக்கப்படும் டவுன் பேருந்து மற்றும் ராம நாதபுரத்திலிருந்து திருஉத்தர கோசமங்கை வழியாக சாயல்குடிக்கு இயக்கப்படும் ஒரு பேருந்துசில் முழுக்க, முழுக்க சிஎன்ஜியில் மட்டுமே இயங்கக்கூடிய வகையில் இன்ஜின்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பேருந்தில் இருந்த டீசல் டேங்க் அகற்றப்பட்டு 7 கிலோ எடையளவு எரிவாயு நிரப்பக்கூடிய வகையிலான 7 சிலிண்டர்கள் பாதுகாப்பு அம்சங்களுடன் பொருத்தப் பட்டுள்ளன.
இதன் சோதனை ஓட்டம் நடந்த நிலையில் 14.6.2024 அன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. இதனால் எரிபொருள் செலவு குறைவதுடன், சுற்றுச் சூழல் மாசுபடுதல் தவிர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொது மக்க ளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

No comments:

Post a Comment