நானும் ஹிந்து என்பவர்களின் கவனத்திற்கு... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 8, 2024

நானும் ஹிந்து என்பவர்களின் கவனத்திற்கு...

featured image

கருப்புப்பணத்திற்கு கணக்கு காட்டாமல் திருப்பதிக்கு கொண்டு போய்க்கொட்டி அதை வெள்ளையாக்கும் மந்திரத்தை(?)ச் சொல்லும் திருப்பதி கோவிலில் கோடிகளைக் கொட்டியவர்களுக்கு ரகசியமாக அவர்களின் கருப்புகள் வெள்ளையாக மாறிவிடும்.

இது தெரியாமல் சூத்திர பாமரர்கள் வாழ்நாளில் சிறுக சிறுக உழைத்து சேமித்த பணத்தை லட்சக்கணக்காக கொண்டு போய் கொட்டுவார்கள். அவர்களுக்கு நெற்றியில் மூன்று பட்டைக்கோடுகளும், ஒரு லட்டும் தான், அந்த லட்டும் சாமியைப் பார்த்தேன் என்பதற்கு சான்றாக தரும் தற்போது க்யூ ஆர் கோடு கொண்ட ரசீதுக்கு ஒரு லட்டு, மேலும் வேண்டுமென்றால் 50 ரூபாய் தரவேண்டும்.

லட்சக்கணக்கில் பணத்தைக்கொட்டி நெற்றியில் நாமத்தோடு ஒரு லட்டை தூக்கிக்கொண்டு வருபவர்களைப் பார்த்தால் சிரிப்புதான் வரும்.

அந்த லட்டு தயாரிக்க ஆண்டு தோறும் தேவஸ்தானம் வேலைக்கு ஆள் எடுப்பார்கள் அதில் ஒரு கண்டிசன் வைஷ்ணவ பார்ப்பனர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

லட்டு செய்ய மட்டுமல்ல, அவாக்கள் சாப்பிடப் பயன்படும் மூலப்பொருட்கள் எல்லாம் சூத்திரர்கள் விளைவித்துக் கொடுத்தது, ஏலக்காய் தரமானது – கன்னூர், வயநாடு உள்ளிட்ட பல மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் விளைகிறது – பெரும்பாலும் இதனை விளைவித்து கொடுப்பவர்கள் பழங்குடியின மக்களும் அங்கு வாழும் தாழ்த்தப்பட்டச் சமூகத்தினரும்தான். அதனை உள்ளூர் ஏஜெண்டுகள் இவர்களிடம் இருந்து அடிமாட்டு விலைக்கு வாங்குவார்கள்.

அதே போல் தான் வெல்லம் – மத்திய ஆந்திரா மற்றும் கிழக்கு கருநாடகாவில் இருந்து கொள்முதல் செய்கிறார்கள். அங்கு வசிக்கும் பெரும்பாலான மக்களான தாழ்த்தப்பட்ட சமூகத்தவர்களின் கைகளில் தான் வெல்லங்கள் உருவாகிறது.

அதே போல், நெய் – அமுல் உள்ளிட்ட பல தனியார் பால் நிறுவனங்களில் இருந்து கொள்முதல் செய்கின்றனர். அந்த நிறுவனங்களுக்கு பால் கொடுக்கும் பண்ணைகளில் பணிபுரிபவர்களும் பெரும்பாலானோர் உத்தரப்பிரதேசம் பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து இடம் பெயர்ந்த தாழ்த்தப்பட்ட பணியாளர்கள் தான்.

உலர் கொட்டைகள், கடலைமாவு, உள்ளிட்ட லட்டு தயாரிக்க பயன்படும் அனைத்துப் பொருட்களும் உழைக்கும் சாமானிய மக்கள் உருவாக்கியதுதான். ஆனால் அதனை கடாயில் இட்டு பூந்தியாக்கி லட்டு உருட்ட மட்டும் வைஷ்ணவ பார்ப்பனர்கள் தேவையாம்.

அங்கு இந்து என்று யாரும் சென்று விண்ணப்பித்தால் ஏமாற்றம் தான்கிடைக்கும்.
“இந்து விரோதி இந்து விரோதி” என்று பலமுறை கூப்பாடு போடும் ஹிந்துத்துவ அமைப்பச்சேர்ந்த சூத்திரர்கள் என்றாவது.

திருப்பதி கோயிலில் லட்டை உருட்ட ஏன் வைஷ்ணவ பார்ப்பானை மட்டும் வேலைக்கு எடுக்கிறீர்கள் என்று கேட்பார்களா?

ஜனவரி 22ஆம் தேதி திறக்கப்பட்ட ராமன் கோவில் அர்ச்சகர் பணிக்கு 3000 பேர் விண்ணப்பித்து 200 பேர் நேர்முகத் தேர்வுக்கு அழைத்து அதில் 12 பேரை தேர்வு செய்துள்ளனர். தலைமை அர்ச்சகராக 23 வயது நபருக்கு 1,37,000 ஊதியம், அவருக்கு உதவியாளருக்கு லட்சத்து 12 ஆயிரம் ஊதியம்.

இவர்கள் அனைவருமே பாபர் மசூதியை இடிக்கும் போது பிறந்திராத குழந்தைகள்.

அவ்வளவு பேரில் அயோத்தி மசூதியை இடித்து தள்ளிய சூத்திர இந்துக்கள் எத்தனை பேர் – அவர்களுக்கு ராமன் கோவிலில் என்ன வேலை தந்தீர்கள் என்று கேட்டார்களா? அந்த வழக்கில் சிக்கிய நபர்களின் பிள்ளைகள் அயோத்தி ராமன் கோவிலில் போவோர் வருவோருக்கு நெற்றியில் பொட்டு ஒன்றைப்போட்டு 1 ரூ, 2 ரூ, 5 ரூ என பிச்சை எடுக்காத குறையாக நாட்களை ஓட்டுகின்றனர்.

இந்தியாவின் வரலாற்றை எழுத ஒரு குழு (Panel) ஒன்றை அ‑மைத்தார்கள். அதில் ஒருவர்கூட பழங்குடியை சேர்ந்தவரோ, ஒடுக்கப்பட்ட / பிற்படுத்தப்பட்ட சமூகங்களை சேர்ந்தவர்களோ இல்லை. ஏன் தென்னிந்தியாவைச் சேர்ந்த எவரும் இல்லை. எல்லாம் சர்மா, திரிபாதி, சாஸ்திரி, முகோபாத்தியா என ஆரிய பார்ப்பனர்கள்தான். அதை எந்த சூத்திரர்களாவது கேள்வி எழுப்பினார்களா?

No comments:

Post a Comment