வாக்கு எண்ணிக்கை நாள் அன்று பங்குச்சந்தை சரிவு : விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்தில் வழக்கு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 8, 2024

வாக்கு எண்ணிக்கை நாள் அன்று பங்குச்சந்தை சரிவு : விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

டில்லி, ஜூன் 8- வாக்கு எண்ணிக்கை நாள் அன்று பங்குச்சந்தை சரிவு குறித்து விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் கடந்த ஜூன் 1ஆம் தேதி உடன் நிறைவு பெற்றது. அதன் பிறகு வெளியான கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்று கூறப்பட்டு இருந்தது. அதன் காரணமாக அதற்கடுத்து ஜூன் 3ஆம் தேதி இதுவரை இல்லாத அளவுக்கு பங்குச்சந்தை உச்சம் தொட்டது.

ஆனால், அடுத்து ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகி கருத்துக்கணிப்புகள் கூறியதற்கு மாற்றாக முடிவுகள் வெளியாகின. இதனால், பாங்குசந்தை அன்றைய நாள் வீழ்ச்சியடைந்தது. இது குறித்து பல்வேறு குற்றசாட்டுகளை காங்கிரஸ் கட்சியினர் முன்வைத்தனர். தற்போது இந்த விவகாரம் உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளது. முன்னதாக அதானி நிறுவனம் பற்றி ஹிண்டன்பர்க் பத்திரிகை வெளியிட்ட செய்தி காரணமாக பங்குச்சந்தை வீழ்ச்சி யடைந்தது. இதனை அடுத்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வெளிநாட்டு பத்திரிகை செய்தி காரணமாக இந்திய நாட்டு பங்குச்சந்தை சரிவு ஏற்பட்டது.
உள்ளூர் சிறு முதலீட்டாளர்கள் பெரும் இழப்பை சந்தித்ததாக கூறி இதுகுறித்து செபி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment