பொள்ளாச்சி, ஜூன் 11 – ‘நீட்’ தேர்வில் முறைகேடு நடந்திருப்பதால் அது தொடர்பாக சட்ட நடவ டிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு ஆலோசித்து வருவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரி வித்தார்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அரசு மருத் துவமனையில் ரூ.72 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட உள் நோயாளிகள் கட்டணப் பிரிவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 9.6.2024 அன்று திறந்துவைத்து செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாட்டில் புதிய முயற்சியாக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளிகள் பிரிவு கட்டண அறைகள் பிரிவு திறப்பு விழா நடைபெற்றுள்ளது.
இங்கு ரூ.1000 கட்ட ணத்தில் அதிதீவிர சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும்.
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ஏற்கெனவே 19 இடங்களில் செயல்பட்டு வருகிறது. 24 புதிய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டி ருக்கின்றன.
அரசு மருத்துவமனை களில் அளிக்கப்பட்டு வரும் சிறப்பான சிகிச்சையால் நோயாளிகளின் எண் ணிக்கை 3 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட தற்போது மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
‘நீட்’ தேர்வில் இந்த ஆண்டு முறைகேடு நடந் துள்ளது. “நீட்’ தேர்வில் குழப்பம் இருப்பதால் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு ஆலோசித்து வருகிறது என்றார்.
No comments:
Post a Comment