
கிள்ளியூர், ஜூன் 15- கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகம் சார்பாக பகுத்தறிவு விழிப்புணர்வுக்கான திண்ணைப் பிரச்சாரம் கிள்ளியூர் வட்டம், கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியம் மிடாலம் கிராமத்தில் நடைபெற்றது.
இந்தநிகழ்ச்சிக்கு திராவிடர்கழக மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் பரப்புரையைத் தொடங்கி வைத்தார்.
இலக்கிய அணி செயலாளர் பா.பொன்னுராசன், கன்னியாகுமரி கிளைக்கழக அமைப்பாளர் க.யுவான்ஸ் மற்றும் கழகத் தோழர்கள் பலரும் பங்கேற்று தந்தை பெரியாருடைய நூல்கள் பெரியாருடைய கொள்கைகள் அடங்கிய விழிப்புணர்வு துண்டறிக்கைகளை பொதுமக்களிடம் வழங்கி கழகத்தின் கொள்கைகளை பொதுமக்களிடம் எடுத்துக்கூறி பரப்புரையில் ஈடுபட்டனர்.
இந்த பரப்புரைக்கு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்தது.
No comments:
Post a Comment