நீட் தேர்வு முறைகேடு ஒன்றிய அரசின் திறமை இன்மையை வெளிப்படுத்துகிறது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 14, 2024

நீட் தேர்வு முறைகேடு ஒன்றிய அரசின் திறமை இன்மையை வெளிப்படுத்துகிறது

featured image

 முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை, ஜூன் 14 ‘‘சமீபத்திய நீட் தேர்வு முறைகேட்டிலிருந்து தப்பிக்க ஒன்றிய அரசு முயற்சி செய்வது அவர் களின் திறமையின்மை யின் மற்றொரு ஒப்புதலா கும்’’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரி வித்துள்ளார்.
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக அவர் நேற்று (13.6.2024) வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது: கருணை மதிப்பெண்களை ரத்து செய்ய உச்ச நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதன் மூலம் சமீபத்திய நீட் தேர்வு முறைகேட்டில் இருந்து தப்பிக்க ஒன்றிய அரசு முயற்சி செய்வது அவர்களின் திறமையின்மையின் மற்றொரு ஒப்புதலாகும்.

மாநிலங்களின் உரிமையைப் பறித்த பிறகு, முறைகேடுகளின் மய்யமாக விளங்கும் பிரச்சினைகள் மற்றும் ஒழுங்கற்ற முறையில் தேர்வுகளை நடத்துதல் போன்ற முக்கியப் பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசைதிருப்ப அனுமதிக்கக் கூடாது

ஒன்றிய அரசின் திறமையின்மையையும், லட்சக்கணக்கான மாணவர்களின் வேதனையைப் பற்றிய அவர்களின் அக்கறையின்மையையும் கண்டிக்கும் அதே வேளையில், மருத்துவப் படிப்புகளுக்கான தேர்வு முறையைத் தீர்மானிப்பதில் மாநில அரசுகளின் பங்கை மீட்டெடுப்பதுதான் இந்தப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment