பா.ஜ.க. அய்.டி. பிரிவு தலைவர்மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 12, 2024

பா.ஜ.க. அய்.டி. பிரிவு தலைவர்மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு

பா.ஜ.க கட்சியின் அய் டி பிரிவு தலைவராக இருப்பவர் அமித் மாளவியா. இவர் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மேற்குவங்க மாநிலத்தில் தேர்தல் பணி மேற்பார்வையாளராக இருந்துள்ளார்.
அப்போது பல பெண்களுக்கு பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து ஆர்.எஸ். எஸ் நிர்வாகி ஒருவர் பா.ஜ.கவின் மேலிடத்திற்கு புகார் எழுப்பியுள்ளார்.ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி சாந்தனு சின்ஹா முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டு, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனை, சாந்தனு சின்ஹா தனது முகநூல் பக்கத்திலும் ஹிந்தியில் பதிவிட்டிருக்கிறார்.
மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்று 24 மணி நேரத்திற்குள் பா.ஜ.க நிர்வாகி மீது பாலியல் புகார் எழுந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், அமித் மாளவியாவை பா.ஜ.கவில் இருந்து உடனே நீக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்து இருக்கும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா சிறீனேட், ” பல பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய பா.ஜ.க அய்.டி பிரிவு தலைவரான அமித் மாளவியா மீது பா.ஜ.க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். பா.ஜ.கவின் அனைத்துப் பதவிகளில இருந்தும் அமித் மாளவியாவை நீக்க வேண்டும். ஏனெனில், இது மிகவும் செல்வாக்குமிக்க மற்றும் அதிகாரமிக்க பதவி என்பதால் இதில் சுதந்திரமான விசாரணை நடக்காது. எனவே, பதவியிலிருந்து அவர் நீக்கப்படாத வரை இந்த விவகாரத்தில் நீதி கிடைக்காது. மேலும், ஒன்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சர் வாய்மூடி வேடிக்கைபார்ப்பவராக இருக்கமாட்டார் என்று நம்புகி றோம். அதோடு, தேசிய மகளிர் ஆணையம் மனசாட்சிப்படி தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம்” என்று கூறினார். இந்த விவகாரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் தேசிய மகளிர் ஆணையம் எடுக்கும் நடவடிக்கைகளை அறிய விரும்பு கிறோம்” என தெரிவித்துள்ளார்.

யார் இந்த அமித்மாளவியா?
பாஜக அய் டி பிரிவு தேசியத்தலைவராக இருக்கும் அமித்மாளவியா எதிர்கட்சியினரை விமர்சிக்க ஆபாச வார்த்தைகள் அடங்கிய டிக்ஸ்னரி ஒன்றையே உருவாக்கியுள்ளார். என்றும் இவரது ஆதரவாளர்களால் பெருமையுடன் கூறப்பட்டது.
இவரது தலைமையில் நாடு முழுவதும் பல்வேரு போலி செய்திகள் மிகவும் வேகமாக பரப்பப்பட்டது. தமிழ்நாட்டில் தேர்தல் நேரத்தில் கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக மிகவும் பரபரப்பான செய்திகள் வெளியாக இவரது தலைமையில் இயங்கிய குழு தான் முக்கிய காரணம்.
அதே போல் மேற்குவங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் பாலியல்வன்கொடுமை செய்தார் என்று புகார் ஒன்று கொடுக்கப்பட்டது.

உண்மையில் சில பெண்களிடம் வெற்றுத்தாளில் மோடியின் திட்டங்கள் வழங்குவது தொடர்பாக மனு எழுதுகிறோம் என்று கூறி கையெழுத்து வாங்கியுள்ளனர். பிறகு அந்த தாளில் தாங்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டோம் ஆகவே நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று எழுதி காவல் நிலையத்தில் பாஜகவினர் கொடுத்துள்ளனர். இது தொடர்பாக அவர்களது நிர்வாகிகளே தங்களுக்குள் பேசிக்கொண்ட ஒலிப்பதிவு வெளியான பிறகு இந்த மோசடி நடவடிக்கை வெளிப்பட்டது. மேற்கு வங்கத்தில் பாஜக குறைந்த இடங்களே பெற்றதற்கு இவர்களின் மோசடியான போலிக்குற்றச்சாட்டும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.

இவர் திரைப்பிரபலங்கள், விளையாட்டுப் பிரபலங்களை மோடிக்கு ஆதரவாக பதிவிடும் படி மிரட்டி அவர்கள் வெளியிட்ட பிறகு அதை நாடு முழுவதும் பிரபலப்படுத்தியும் வந்துள்ளார்.
முக்கியமாக விவசாயிகள் போராட்டத்தின் போது விவசாயிகளால் நாட்டின் நற்பெயர் சீர்கெடுகிறது என்று கிரிக்கெட் வீரர் டெண்டுல்கரின் சமூகவலைதளப்பதிவிற்குப் பின்னால் இவர்தான் இருந்தார். அவர் பதிவு வெளியிட்ட மறு வினாடியே இந்தியா முழுவதும் பல லட்சமாக பகிரப்பட்டது.

மோடி நேரடியாகவே முகநூல் டுவிட்டர்(எக்ஸ்) உள்ளிட்ட சமூகவலைதளத்தின் தலைவர்களை வெளிநாடுகளில் சந்திக்கும் போது அமித்மாளவியாவின் பதிவுகள் எந்த ஒரு தடையுமின்றி யார் அதை ரிப்போர்ட் செய்தாலும் அதை கவனத்தில் எடுக்காமல் வேகமாக பரவ ஒத்துழைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டதாக இவரே பெருமையோடு சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
பெரும்பாலான இளை ஞர்களை மூளைச்சலவை செய்து அவர்களை மத வெறியர்கள் ஆக்கியதில் இந்த அமித்மாளவியாவின் பங்கு மிகவும் அதிகமாகும் இப்படிப்பட்டவர் தான் மேற்குவங்கத்தில் தேர்தல் பணியில் இருக்கும் போது பாலியல்வன்கொடுமைசெய்து ஆர்.எஸ்.எஸ் பிரமுகராலேயே குற்றம் சாட்டப்பட்டுள்ளார் மோடி அமித்ஷாவிற்கு மிகவும் நெருங்கிய நபர்களில் முதன்மையாக இருக்கும் இவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

No comments:

Post a Comment